________________
346 அவர்கள் இருவரும் ஏற்றுக் கொள்வதாய் இருந்ததாம். இக் கதையைச் சாத்தனார் துணைக் கதையாக எடுத்தாண்டுள்- ளார். இக்கதையை. உணரமுடிவு 67ணான் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப - நரை முடித்துச் சொல்லான் முறை செய்தான் சோழன் குலலிச்சை கல்லாமல் பாகம் படும்* என்று பழமொழி நானூறு கூறுகிறது. 7.3.3 மனுகதை இக்கதை மும்முறை சிலம்பில் துணைக்கதையாக வந். துள்ளது. மலை என்ற சோழர்குல முன்னோன் ஒருவன் பக- விற்கு நீதி வழங்கும்பொருட்டுத் தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக்கொன்ற வரலாற்றை இக்கதை உரைக்கும். மனுவின் ஈகை இன்றன்வும் சிறந்த நீதிக்கு எடுத்துக்காட்டா உரைக்கப்பட்டு வருகிறது. 7.3.4 யூகி அந்தணனாக வந்தது இக்கதையை வரலாற்றுக்கதை என்று கூறச் சரியான வர வாற்று மூலங்கள் கிடைக்காவிடினும், இதை ஒரு இலக்கிய வரலாற்றுக் கதையாகக கொள்ளத் தடையில்லை வத்தவ நாட்டு மன்னனாகிய உதயணனைப் பிரச்சோதன மன்னன் யானைப்பொறியால் வஞ்சித்துச் சிறை பிடித்தான். அவன் சிறையுண்ட செய்தி அறிந்து, உதயணனின் நண்பனும், மதி: அமைச்சனுமான யூரி என்பான், அவனை விடுவிக்கும் பொருட்டு, பிரச்சோதனனின் தலைநகரமாகிய வஞ்சை கரத்தின் தெருவிலே பித்தன் போல் நடித்துச் சென்றான். அப்பொழுது, அவன் நோயுற்று இருக்கிறான் என்று நினைத்த மக்கள் அவனைச் சூழ்ந்து சென்றனராம். இதை, சாத்தனார்,