________________
8 இரட்டைக் காப்பியத் துணைக்கதைகள் ஒப்பீடு 80 துணைக்கதைகளைக் காப்பிய உத்தியாக எல்லாக் ரிப்பியப் புலவர்களும் பயன்படுத்தியுள்ளார். இளங்கோ- வடிகளும், சாத்தனாரும் இதற்கு விதிவிலக்கல்லர். இரட்- டைக் காப்பியப் புலவர்களான இவ்விருவரும் இவ்வுத்தியை எடுத்தாள்வதில் சில இடங்களில் ஒன்றுபட்டும், பல இடங்- களில் வேறுபட்டும் திகழ்கின்றனர். புலவர்களின் தனித்து வமும்.புலமை நுட்பமும், காப்பியப் பாடுபொருளும் இதற் குக் காரணமாக அமைந்துள்ளன. துணைக்கதைகள் காப் பியத்துள் பயின்றுவரும்போது, படிப்பவர்களுக்கு அக்கதை. கள் வலிந்து திணிக்கப்பெற்ற உணர்வைத் தரக்கூடாது. இயல்பாகக் காப்பியத்துடன் ஒன்றி?நிற்குமாறு எடுத்துரைக் கப்பட வேண்டும். அடிகளும் சாத்தனாரும் துணைக்கதைப் படைப்பில் இம்முறையை நன்கு பேணியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 8.I சிலப்பதிகாரம் மணிமேகலை மணிமேகலை இரண்டிலுமே துணைக்கதைகள் பயின்றுவரும் முறை ஒன்று போலவே அமைந்துள்ளது. துணைக்கதைகள் இக்காப்பியங்களில் உவமைகளாக, வர்ணனைகளாக, எடுத்துக்காட்டுகளாக பின்னணி விளக்கங்களாக என்று பல பயன்பாட்டு நிலை களில் எடுத்தாளப்பட்டுள்ளன. ஆனால், சிலப்பதிகாரத் தில் துணைக்கதைகள் பரவு மொழியாகவும் பயின்று வந்துள்