பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

154 மணிமேகலையில் பரவு மொழித் துணைக்தைகளைக் காண முடியாது. 8.2 சிலம்பு, மோலை இரண்டிலும் புராணக்கதைகள். வரலாற்றுக்கதைகள், நாட்டுப்புறக்கதைகள் என்ற மூவகைக் கதைகள் பயின்று வந்துள்ளன. இரண்டு காப்பியங்களிலும் புராணக் கதைகள் அதிகமாகவும் நாட்டுப்புறக் கதைகள் குறைவாகவும் பயின்று வந்துள்ளன. 8.3 சிலப்பதிகாரத்தில், அடிகள். 61 துணைக்கதை- களை எடுத்தாண்டுள்ளார், சாத்தனார் சிலப்பதிகாரத் துணைக்கதைகளில் பகுதியாக 32 துணைக்கதைகளை எடுத் தாண்டுள்ளார். 8.4 சிலப்பதிகாரத்தில் பயின்று வந்த நாளங்காடிப் தக்கதை பிரத்தியும்தன் பேடி வடிவம் கொண்டது. திரு மகள் கொல்லிப்பாவை உருவெடுத்தது. அகத்தியர் சாபம், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் கதை, கரிகால் வளவனின் வடதிசைப் போர் போன்ற கதைகள் மணி- மேகலையிலும் பயின்று வந்துள்ளன. ஆனால் இக்கதைகள் பயின்று வரும் முறை சிலப்பதிகாரத்திலிருந்து மாறுபட்டு இருக்கிறது. . 8.5 சிலப்பதிகாரத்தில் சிபி மன்னர் கதை, மனு கதை. திருப்பாற்கடல் கடைந்த வரலாறு, கண்ணன் குருத்த மரத்தை ஒடித்தது, அவன் பாண்டவர்களுக்காகத் தூது திடந்தது, வாமன அவதாரம் போன்ற கதைகள் திரும்பத் திரும்ம எடுத்தாளப்படுகின்றன. மணிமேகலையில் கவேரன் தவம் இருந்த வரலாறு ஒன்றுதான் திரும்ப எடுத்தாளப் நட்டுள்ளது. 8.6 சிலப்பதிகாரத்தில் புராணக் கதைகள் ஒன்றுக் கொன்று தொடர்புடையனவாய் எடுத்தாளப்பட்டுள்ளன. அதனால். அவற்றை வகைப்படுத்திக்காண முடிந்தது.மணி..