________________
188 மோலையில் புராணத் துணைக்கதைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாய் எடுத்துக் காட்டப்படவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய அமைவனவாய்ச் சாத் தனார் கவனித்துப் படைத்துள்ளார் என்று தோன்றுகிறது. 8.7 சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையிலும் கட லாடு காதையிலும் பல துணைக்கதைகள் இடம் பெற்றுள்- ளன. மற்றக் காதைகளில் இந்த அளவு துணைக்கதைகள் பயின்றுவரவில்லை. இப்படி, ஒரு காதையிலேயே அதிகக் துணைக்கதைகளைப் படை த்துக் காட்டும் போக்கு சாத்த- னாரிடம் இல்லை. இவர், காப்பியம் முழுவதும் பரவலாகத் துணைக்கதைகளை எடுத்தாண்டுள்ளார். 8.&சாத்தனார் மணிமேகலையில் பௌத்தமதக்கொள்- கையை விளக்க இரண்டு துணைக்கதைகளை எடுத்தாண்டுள்- ளார். தவிர, மற்றுமொரு கதையைப் பௌத்த பீடிகையைம் பற்றியதாக அமைத்துள்ளார். மேலும், பௌத்த நூல்கள் கூறும் இரண்டு புராணக்கதைகளையும் எடுத்தாண்டுள்ளார் சாத்தனார். இப்படி ஒரு மதத்தை உயர்த்திப் பேச வேண்- டும் என்ற நோக்கில் துணைக் கதைகளை எடுத்தாளும் போக்கை இளங்கோ அடிகளிடம் காண முடியாது. . 8.9 மணிமேகலையில் சாத்தனார் உவமைகளாகத் துணைக்கதைகளைச் சற்று அதிகம் படைத்துள்ளார். சிலம்- பில் 61 துணைக்கதைகளுக்கு 3 துணைக்கதைகளையே உவமை வாயிலாகப்படைத்துள்ளார் அடிகள். சாத்தனார் B2 துணைக்கதைகளில் 9 கதைகளை உவமைகளாகப் படைத் துள்ளார். காப்பிய உவமைகளாகத் துணைக்கதைகளை அமைக்கும் உத்தி காப்பியச் சுவையைப் பெருக்குகிறது. அதை உணர்ந்த சாத்தனார் காப்பிய உவமைகளை அடி. களைக்காட்டிலும் அதிகம் படைத்துக்காட்டியுள்ளது குறிப்- பிடத்தக்கது.