பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிவுை 9 இரட்டைக் காப்பி பங்களான சிலம்பும் மேகலையும் தம் முள் சொல், அடி, நிகழ்ச்சி, பாத்திர ஒற்றுமைகளையும், காப்பியப் பாடு பொருள் தொடர்பும் கொண்டிருப்பதுடன், கிளைக்கதைகள், துணைக்கதைகளை எடுத்தாள்வதிலும் தம்முள் தொடர்பும், ஒற்றுமைகளும் கொண்டு திகழ்கின்- றன என்பதை இதுவரை கண்டோம். இக்கிளைக்கதை- கள், துணைக்கதைகளின் தொடர்போ அல்லது ஒற்றுமை- களோ இவ்விரு காப்பியங்களில் எது முந்தியது என்ற ஆய்- விற்குத் துணை நிற்குமா என்றும் சிந்திக்க வாய்ப்பு ஏற்படு. கிறது. பொதுவாக கதை நிகழ்ச்சிகளைக் கொண்டு பார்த்தால் சிலப்பதிகாரம் முன்னால் எழுதப்பட்டதாகத் தோன்றும். மேகலை பின்னால் எழுந்ததாகத் தோன்றும். கிளைக்கதைகள், துணைக்கதைகளைப் பொறுத்தவரை துணைக்கதையின் பங்கு சாப்பியத்தில் மிகக்குறைவு ஆத- லால் அவை இவ்வகை ஆராய்ச்சிக்குப் பயன்படா.இனி கிளைக்கதைகளைக் கொண்டு இவ்லனகக் கருத்தை ஓரளவு வலியுறுத்த முடிவதை இங்குக் காணலாம். சிலப்பதிகாரத்தில், வரந்தருங் காதையில் எடுத்தாளப்பு படும் கிளைக்கதை மணிமேகலையின் துறவு பற்றியது. இக் கதையில் மேகலை, மையீ ரோதி வகைபெறு வனப்பின் இவகை வகுக்கும் பருவங் கொண்டது