பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

13 சான்று: சிலப்பதிகாரம்: பொற்கொல்லன்கூறும் கதை. பொற்கொல்லன் கூறிய கதையைக் கேட்டுத்தான் கல்லாக் களிமகன் கோவலனைக் கொல்ல, காப்பியத்தின் போக்கு மாறுபடுகிறது. 26 5.4 காப்பியப் புலவனின் கோட்பாட்டை. உணர்த்த: அதாவது, ஒரு சிறப்பான நீதியை அல்லது உண்மையை உணர்த்த, காப்பியப் புலவர்கள் கிளைக் கதைகளைப் பயன் படுத்தியுள்ளனர். சான்று: மணிமேகலையில், விசுவாமித்திரன் கதை, பசிப்பிணியின் கொடுமையை எடுத்துக்காட்டப் புலவனால் எடுத்தாளப்படுகிறது.97 5.5 துணைப் பாத்திரங்களின் அறிமுகத்திற்காகவோ அல்லது துணைப் பாத்திரங்களின் கதை கூறுவதற்காகவோ சில கிளைக்கதைகள் அமைதல்: சான்று: சிலப்பதிகாரத்தில் தேவந்தி கதை துணைப் பாத்திரத்தின் அறிமுகமாக அமைந்துள்ளது. 28 மணிமேக லையில் சுதமதி கதை துணைப்பாத்திரத்தின் கதையாகவே அமைந்துள்ளது.21 5.6 காப்பியப் பாத்திரத்தின் செயல்பாட்டுக்கு வழி கோல்வதாக அல்லது செயல்பாட்டைத் தடுக்கும் முகமாக: 30 சான்று: சிலப்பதிகாரத்தில் குரங்குக்கை வானவன் கதை மாதரியை அடைக்கலம் ஏற்கத்தூண்டுவதாய் அமைந்துள்- ளது." மணிமேகலையில் சுதமதிக் கதையின் முற்பகுதி, மேகலை தனித்து மலர் கொய்யச் செய்வதைத் தடுக்கும் முக. மாக அமைந்துள்ளது. 31 5.7 காப்பியப் புலவர்கள் காப்பியத்தில் இடம்பெறும் நாடு நகரங்களைச் சிறப்பிக்கச் சிலகதைகள் வருதல்: சான்று: சிலப்பதிகாரத்தில் நாளங்காடிப் பூதக்கதை புகாரின் பெருமை பேசுவதற்காக எடுத்தாளப்படுகிறது.""