பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 5.8 கதையில் வருவார் நிலையை உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் விளக்க: *3 . சான்று: இராமாயணத்தில் அகலிகை கதை. அகலிகை, தன் கணவன் என இந்திரனை நினைத்து மயங்கி நிற்பது, சீதை இராவணனிடத்தில் பல துன்பங்களிலும் மயங்காது நின்று தன் பெண்மை காத்த நிலைக்கு முரணாக அமைந்துள்ளது. சுயம்பிரம்பை கதை; சீதை மாற்றானிடத்துச் (இராவண னிடத்து) சிறைப்பட்ட நிலையில் அனுமன் வந்து விடுவிக்- கின்றாள். அதற்கு இணையானது சுயம்பிரம்பை சிறையி- ருந்து அனுமனால் விடுவிக்கப்படுவது. இவ்வாறு,பற்பல நோக்கங்களுக்காகக் காப்பியப் புலவர்- களால் கிளைக்கதைகள் எடுத்தானப்படுகின்றன. அன்றியும். "பிற இலக்கிய வகைகளைக் காட்டிலும் காப்பீயங்களில் கிளைக்கதைகள் மலிந்திருப்பதகுக் காரணம் அதன் நெகிழ் வான கட்டமைப்புத் தன்மையாகும். நடிப்பின் துணை யின்றி, கதை கூற்று முறையில் புலவன் கதையை நடத்திச் செல்வதால். காப்பியத்தில் கிளைக்கதைகளைப் படைக்க முடிகிறது. 34 6.0 காப்பியக் கிளைக்கதை மையக்கதையுடன் இணைக்கப்படு உத்தி காப்பியக் கிளைக்கதைகள் சிறப்பாக இருவழிகளில் மையக்கதையுடன் இணைக்கப்படுகின்றன. புலவர் கூற்று- மூலமும், பாத்திரக் கூற்று மூலமும் பெரும்பான்மையான கிளைக்கதைகள் மையக்கதையுடன் இணைக்கப்படுகின்றன. கூற்று முறையில் அல்லாது சொல்லப்படும் மிகச் சில கிளைக்- கதைகள், காப்பியப் பாத்திர நினைவோட்டத்தால் மையக் கதையுடன் தொடர்பு படுத்தப்படுகின்றன. 6.1 புலவர் கூற்றுத் தொடர்பு: காப்பியப் புலவன் தானே கிளைக்கதையைச் சொல்வது