பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15 தமிழ்க்காப்பியங்களில் அருகிக் காணப்படுகிறது.சிலப்பதி- காரத்தில் தேவந்தி கதை ஒன்றுதான் காப்பியப் புலவரால் சொல்லப்படுகிறது. அக்கதை துணைப் பாத்திர அறிமுகத்- திற்காக எடுத்தாளப்படுகின்ற கதை; ஆதலால் காப்பியப் புலவராலேயே சொல்லப்படுகிறது. 5.2 பாத்திரக் கூற்றுத் தொடர்பு: இதை ஆறு வகையாகப் பிரிக்கலாம். 1.நிகழ்ச்சித் தொடர்பு 2. பாத்திரத் தொடர்பு 3.பாத்திரக் கூற்றுத் தொடர்பு 4. காப்பியத்தில் இடம் பெற்றுள்ள ஊர், ஆறு சம்பந் தபட்டத் தொடர்பு 5. காப்பியம் பேசும் சமயத் தொடர்பு 6.காப்பியப் பாவிகத் தொடர்பு இந்த ஆறு வகையும் பாத்திரக்கூற்றாக அமைந்திருக்கும். அவற்றில் மூன்றாவது குறிப்பிட்ட வகையைத் தவிர, மற்ற ஐந்தும் பாத்திரக்கூற்றாக வந்தாலும், அந்த இணைப்பைக் காட்டிலும், அவற்றில் முறையே நிகழ்ச்சித்தொடர்பு,பாத் திரத் தொடர்பு, ஊர் ஆறு சம்பந்தப்பட்ட தொடர்பு, சமீ யத் தொடர்பு, பாவிகத் தொடர்பு இவைகளே அதிக இணைப்பைத் தருவதால், அவைகளைப் பாத்திரக் கூற்றுத் தொடர்பு என்ற மூன்றாவது வகையில் அடக்கவில்லை. ஆனால், மூன்றாவது பிரிவில், கூற்றுத் தொடர்பு ஒன்றே மையக் கதையுடன் கிளைக்கதையை இணைப்பதால் இல் வகைக் கதைகள் பாத்திரக்கூற்றுத் தொடர்பு' என்ற வகையில் அடக்கப்பட்டுள்ளது. 6.2.1 நிகழ்ச்சித் தொடர்பு: காப்பிய மையக்கதை ஓட்டத்தில் ஒரு நிகழ்ச்சி நடக்க, அந்நிகழ்ச்சியின் முன்பாங்கை விளக்குமுகமாகச் சில கிளைக்- கதைகள் இணைக்கப்பட்டிருக்கும்.