________________
2 சிலப்பதிகாரத்தில் கிளைக்கதைகள் 2.1 தமிழ்க் காப்பிய முன்னோடியான இளங்கோவடி கள் படைப்பான சிலப்பதிகாரத்தில், கோவலன் கண்ணகி மாதவி ஆகியோரின் வாழ்க்கைப் போராட்டக் கதையையே மையக் கதையாக அமைத்துள்ளார். கண்ணகி கோவலன் திருமண வாழ்வில் தொடங்கும் மையக்கதை கண்ணகி தெய்வமாகக் கொண்டாடப்படுவதுடன் முடிவடைகிறது. இடையில் கோவலன் கண்ணகியைப்பிரிந்து மாதவியை நாடு வது வளர்ச்சியாகவும், கோவலனும் கண்ணகியும் மதுரைக் குச் செல்லது உச்சகட்டமாகவும், கோலவன் கொலையுறு- வது வீழ்ச்சியாகவும் அமைந்து சிறக்கிறது.இம் மையக் கதை கோவலன், கண்ணகி,மாதவியைத் தலைமை மாந்தர்- களாகவும். தேவந்தி, கவுந்தி, மாடலன், பாண்டியன் பொற்- கொல்லன் செங்குட்டுவன் ஆகியோரைத் துணை மாந்தர்- களாகவும், மாங்காட்டு மறையோன், மாதரி,ஐயை, லேண்மாள், கோப்பெருந்தேவி போன்றவர்களைச் சிறு பாத்திரங்களாகவும் கொண்டு திகழ்கிறது.5 2.2. சிலப்பதிகார மையக்கதை கடலில் கலக்கும் சிற் றறுகளென, பல கிளைக்கதைகள் இடையிடையே சேர்ந்து காப்பியத்தை உலகம் தழுவியதாக்குகின்றது. பதினாறு இனைக்கதைகள், கோவலன் கண்ணகி வாழ்க்கைக் கதையில்