பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

29 அது சிறக்காது. ஆகையால், அடிகள், தானே கதை கூறு- வதாக அமைந்திருப்பது மிகப் பொருத்தமுடையதாகும். இக்கிளைக்கதை துணைப்பாத்திர அறிமுகத்திற்கும். அத்- துணைப் பாத்திரத்தின் வாழ்க்கைப் பின்னணியைக் காட்டு. வதற்கும் அடிகளால் பயன்படுத்தபட்டுள்ளது. தேவந்தி பாத்திரத்தையே நாம் இக்கதைப்பின்னணியில்தான் புரிந்து கொள்ள முடிகிறது என்பதால் இக்கதையை 'ஒட்டிய கிளைக்கதை' என்ற வகையில் அடக்கலாம். ଦ . 2.4.4 இதே 'தேவந்திகதை' பின்னால் வஞ்சிக்காண். டத்திலும் கிளைக்கதையாக எடுத்தாளப்படுகிறது. வரந். தரு காதையில் செங்குட்டுவனுக்கு, மாடலன் கூறுவதாக இக்கிளைக் கதை இடம்பெறுகிறது. ஒரே கிளைக்கதையைக் காப்பியத்தில் இருவேறு இடத்தில், இருவேறு பயன்பாடு கருதி எடுத்தாண்டுள்ளார், அடிகள். தேவந்தி பற்றி யாதும் அறியாதவன் குட்டுவன். அவள் கண்ணகியைப் பற்றிப் புலம்புவதும், அவள் சம்பந்தப்பட்டவர்களைப் பற்றி அறிந்து வைத்திருப்பதும், அவனுக்கு வியப்பை அளிக்கிறது. தவிர, தெய்வம் அவன்மேல் ஏறிப் பேசுவது கண்டும் திகைத்து நிற்கிறான். ஆக, தேவந்தி பற்றி யாதும் அறியாத குட்டுவன் கேட்க, முன்பே சாத்தனுடன் தொடர்புடைய மாடலன் இக்கதையைக் கூறும் பொருத்தம் சிறப்புடையது. குட்டுவன் பின்னால் தேவந்தியைக் கண்ணகிக்கு, பூஜை செய்பவளாகம் பணிக்கப் போகிறான். அந்நிலையில் அவள் வரலாறு அறிந்து, அதைச் செய்வது பொருத்தமாக அமையும் என்ற நிலையிலும், குட்டுவன், நடக்கும் யாலை- யும் கண்டு ஒன்றும் புரியாமல் திகைத்து நின்ற நிலையிலும் அவன் திகைப்பை நீக்க, இக்கிளைக்கதையை இரண்டாவது முறையாக அடிகள் எடுத்தாள்கிறார். காப்பிய முடிவில் பேசப்படும் இக்கதையின் பயன் குட்டுவன் கேட்பதுடன் முடிந்து விடுவதால், இதை ஊன்று கதையாகவே கொள்ள முடிகிறது.