________________
3) கோவலன் தன்வாழ்நாளில் செய்த நல்ல செயல்களை, அவனிடமே இன்னொருவர் கூறுவதாகப் படைத்துக் காட்டி யிருக்கும் அடிகளின் புலமை நுட்பமும் அறிந்து மகிழத்தக் கதே. "இல்லோர் செம்மலாக, செல்லாச் செல்வனாக, கருணை மறவனாக விளங்கி! நீ, இம்மைப் பிறப்பில் நன்மைகளைச் செய்த நீ,மாமணிக் கொழுந்தாகிய கண்ணகி யுடன், அறியா நகரில் தனியே நிற்கிறாயே" என மாடலன் வருந்திக் கூறுவது அங்கு ஒரு அவவச் சூழலை உண்டாக்கு. கிறது. தவிர, நீ ஒரு தனி உழந்து நிற்கும் கோலம்.உம்மைப் பயனின் விளைவோ?' என மாடலன் வினவிய பின்னரே கோவலன் தான் கண்ட தீக்கனவைப் பற்றி நினைக்கிறான். கோவலனுக்கு தன் முன்நிலைகளை, தான் முன்பு செய்த நன்மைகளை உணர்ந்தபின்தான் இதுவரை கவுந்தி அடிகளி- டமும், கண்ணகியிடமும் கூறாத தீக்கனவின் நினைப்பு எழுந்து, அதை மாடலனிடம் கூறத் தோன்றுகிறது. ஆக. கோவலன் இவற்றைக் கேட்பதால்தான் அவனுககும் 'வினைப்பயன்' பற்றிய சிந்தனையே எழுகிறது. மேற்கூறிய காரணங்களால் கோவலனே இக்கதைகளைக் கேட்பதாக அமைத்திருப்பது சிறப்புடையதாகிறது. இளங்கோவடிகள், இம்மூன்று கதைகளையும் கோவலன் கொலைப்படுவதற்குச் சற்று முன்னதாகவே படைத்துக் காட்டுகிறார். கோவலன் தன் வாழ்நாளில் செய்த நன்மை. களை அவன் இறப்புக்குப்பின் காட்டினால், அது இறந் தோர் துதி பாடுவதாக அமைந்துவிடும். ஆகவே அவன் இறப்புக்கு முன்னரே படைத்துக் காட்டி. இப்படிப்பட்ட நல்லவன் சாகிறான் என்ற நிலையில் அவலச் சுவையை மிகு விக்கிறார். இக்கதைகளை அடிகள் மூன்று நோக்கங்களுக்காக எடுத் தாள்கின்றார். (i) காப்பியத் தலைவனான கோவலனின் பண்பினை