பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

33 ஈதை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. கண்ணகியை மாதா. பிடம் தந்து, அதற்கு அரணாக அடைக்கலத்தின் பேரின்- பத்தை ஒரு கதைமூலம் எடுத்துக்காட்டுகிறார், கவுந்தியடி கள். அடைக்கலம் கொடுக்கும் கவுந்தியடிகள். அடைக்கலம் பெறும் மாதவியிடம் இக்கதையைக் கூறுவதும், பின்னவர் சேட்பதுமாக, பொருத்தமாக அமைந்துள்ளது. மாதரியிடம் சுண்ணகியை அடைக்கலம் தரும் கவுந்தி யடிகள், கண்ணகியின் கற்பின் மேன்மையையும், அவள் குடும்பச் செல்வ நிலையையும் கூறி, அவளையும் கோவல- னையும் மதுரை நகர் செல்வந்தர்கள் விருந்தினராக ஏற்றுக் கொள்ளும் வரை ‘ஆடைக்கலமாக ஏற்றுக் கொள்க' என்று கூறுகிறாள். அதோடு, முன்பு அடைக்கலம் பெற்றதினால் பேறு அடைந்த எட்டிசாயலன் கதையையும் கூறுகிறாள். தரங்கிற்கு அடைக்கலம் கொடுத்த சாயலனும், அவன் மனைவியும் முட்டா இன்பம் பெற்றதை எடுத்துக்காட்டி, மாதரியைவும் அவ்வின்பம் பெறும்படி வேண்டுகிறாள். இக்கதை காப்பியச் சூழலைப் பொறுத்தவரை, மாதரி- யின் செயல்பாட்டைத் தூண்டுவதற்காக எடுத்தாளப்பட்டி. ருந்தாலும், சிறந்த நீதியையும் எடுத்துரைக்கிறது. தவிர. இளங்கோவடிகளுக்கும் அடைக்கலக் கோட்பாட்டைப் பற்- றிப்பேசும் எண்ணம் இருந்திருக்க வேண்டும். மிக் விரிவாகச் கதை கூறுவது மட்டும் அன்றி, அடைக்கலப் தவத்தோர் அடைக்கலம் தான் சிறிதாயினும் மிக்க பேரின்பம் தரும் அது4 பயனை, என்று கூறுவதாலும் இதை உறுதி செய்ய முடிகிறது. இக் கதையின் பயன், மாதரி அடைக்கலம் ஏற்பதுடன் முடிந்து விடுவதாலும், கூற்றளவில் மட்டுமே காப்பிய மையக்கதையு- டன் இக்கிளைக்கதை தொடர்புபடுத்தப் பட்டிருப்பதாலும் இதை ஊன்றுகதையாகவே கொள்ள முடிகிறது.