பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 2.4.7 அரண்மனையில் திருட்டுப்பற்றிய கதை இக்கிளைக்கதை அரண்மனைப் பொற்கொல்லனால் சொல்லப்படுகிறது. பொற்கொல்லன், அரசன் அனுமதியு உன் கோவலனைக் கொல்ல காவலர்களுடன் வருகிறான். அவர்கள் கோவலனைக்கண்டு, அவனை நல்லவன் எனக்கரு- திக் கொல்லத்தயங்கி நிற்கின்றனர். இச்சமயத்தில் அவர்கள் கோவலனுடன் உரையாடினால்,அவன் திருடன் அல்ல என் பதை அறிந்து விடுவார்கள். பொற்கொல்லனின் சூழ்ச் கெட்டுவிடும். ஆகவே, மதிநுட்பம் வாய்ந்த அந்தப் பொற்- கொல்லன். காவலர்கள் தயங்கிய அந்த வினாடியே கள்வர் களின் சாகஸங்களைப் பற்றிக் கூறியும், கள்வர் ஆற்றலுக்குச் சான்றான இக்கதையைக் கூறியும் அவர்கள் பேச்சைத் தடைப்படுத்துவதுடன், அவர்கள் மனத்தையும் மாற்றிவிடு கிறான். இக்கதை மூலம், இளங்கோ, வேந்தனின் மாலையைக் கைப்பற்றத் தூதுவன் வேடத்தில் திருடன் வந்ததுபற்றியும். வேந்தன் அவனைத் தன் வானால் தடுக்கும்போது, அத்திரு டன் அதைத் தன்கை உறையால் தடுத்து மாயமாய் ம மறைந் ததுபற்றியும் சுவைபட எடுத்துரைக்கின்றான். பொற்கொல் லன். இக்கதை, அரண்மனைத்திருட்டைப் பற்றி அககாலத் திலநாட்டில் வழங்கிய கதையாக இருந்திருக்க வேண்டும். இந்த அரண்மனைத் திருட்டுப் பற்றிய கதை. காவலர்கள் கோவலனுடன் பேசும் பேச்சைத் தடுப்பதற்காகவும், காவ லர்களின் மனத்தை மாற்றுவதற்காகவும் என்ற இருநோக்கத்- துடன் பொற்கொல்லனால் கூறப்பட்டுள்ளது. . . இக்கதை, காப்பியத்தில் ஒரு பெரும் திருப்பத்தை உண்டு. பண்ணுகிறது. இக்கதையைக கேட்டபின் தான், கல்லாக்களி மகனொருவன் கோவலனைக் கொல்வதால் காப்பிய யாட்டம் திசை மாறுகிறது. இப்படி,இக்கிளைக்கதை காப்பிய மையக்