________________
35 கதைப்போக்கையே மாற்றுவதால்,இதை ஒன்றிய கிளைக் சதையாகக் கொள்ளமுடிகிறது. இக்கதை எடுத்துக்காட்டு சதையாக வந்தாலும், கூற்றளவிலேயே காப்பியத்துடன் தொடர்பு படுத்தப்பட்டிருந்தாலும், காப்பியத்தில் இதன் பயன்பாடு, முடிவுவரை அமைந்திருப்பதாலும், காப்பியத் திருப்பத்திற்கு வழி கோல்வதாலும் இக் கதையை ஒன்றிய கிளைக்கதையாகக் கொள்ளமுடி.கிறது. சிலம்பைப் பொறுத் தவரை, இக்கதை ஒன்றே ஒன்றிய கதையாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2.4.2 பொற்கைப் பாண்டியன் கதையும், பராசுரன் கதையும் இவ்விரண்டு கிளைக்கதைகளும்,பாண்டிய மன்னர்களின் செங்கோல் சிறப்பைப் பேச எழுந்தவைகளாகும். மதுரையின் காவல் தெய்வமான மதுராபுரித் தெய்வம் கண்ணகிக்குச் சொல்வதாக இவ்விருகதைகளும் அமைந்துள்ளன. பாண்டிய மன்னன், தன் கணவனை ஆராயாது கொன்றான் என்ற சினத்தில் ஊரை எரித்து, ஆற்றாமல் உழன்று நின்ற கண்ணகியிடம், மதுராபுரித் தெய்வம், பாண்டிய மன்னன் குற்றமற்றவன். 'உன் சினம் தணிக' என்பதை உணர்த்து வதற்கு முன்பாக, ஒரு முன்னோடியாய், பாண்டியர் குலப் பெருமையையும், செங்கோல் சிறப்பையும் பேசும் இக்கதை. அளைச் சொல்கிறது. சினந்து பொங்கி நிற்கும் கண்ணகி. யிடம் எடுத்தவுடன் பாண்டியன் குற்றமற்றவன் என்று கூறினால் அவள் சீறுவதுடன், மனத்திலும் கொள்ளமாட்- டாள் எனக்கருதி, மதுராபுரித் தெய்வம் பாண்டியர்களின் செங்கோல்சிறப்பை முதலில்பேசி, அவள் மனத்தைச் சற்றுப் பண்படுத்துகிறது. பின்னால் கோவலனின் பழவினைக் கதை எடுத்தாளப்படுகிறது. அது, கோவலனின் இறப்புக்கு அவன் முன்செய்த வினையே காரணம் என்று காட்டி நிற்கிறது. அதாவது, பாண்டியன் குற்றமற்றவன் என்பதை அக்கதை