பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

43 சுதை, பின்னால் வரும் மற்றொரு கிளைக்கதைக்கு அழுத் த ம தருவதாக அமைக்கப்பட்டிருக்கும் போக்கை, மற்றக் சாப்பியங்களில் காண்பதரிது. 2.5.5 அடைக்கலக்காதை, சட்டுரைக்காதை, வரந்தரு காதை என்ற மூன்று காதைகளிலும் மூன்றும், அதற்கு மேற்பட்ட கிளைக் கதைகளும் இடம் பெறுகின்றன. இப் ·டி ஒரு காதையிலேயே, அதாவது ஒரு உட்பிரிவிலேயே அடுத்தடுத்து மூன்று கிளைக் கதைகளைக் கட்டுக் கோப்புக் குலையாது அமைந்திருப்பது சிலம்பின் தனி இயல்பே. 2.5.6 ஒரே சிளைக் கதையையே (தேவந்தி கதை) இரு. கே நோக்கில், இரு வேறு கூற்றில், ஒரே காப்பியத்தில் அமைந்துள்ளார் அடிகள். 2.5.8 காப்பியக் கதையையே, கிளைக் கதையாக்கி, அதே காப்பியத்தில் இடம்பெற வைத்தும் அடிகளின் தனிச் சாதனைதான். 2.5.8 மற்றக் காப்பியங்களுடன் ஒப்பிடும் போது, சிலம் பில் எந்த ஒரு கிளைக் கதையும் தனித்துச்சமயம் பேசுவதற்- காக எடுத்தாளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 2.5.9. தமிழ்க் காப்பியங்களில், சிலம்பில் மட்டுமே, கிளைக்கதை மூலம், காப்பியப் புலவரும் தன்னைக் காப் பியத்தில் இடம் பெற வைத்துக் கொண்ட தன்மையைக் காணலாம். . 2.5.10 ஒரே இடத்தில், ஒரே நோக்கில், ஒரே கூற்றில் மூன்று கிளைக்கதைகளை அடுக்கிக்கூறும்போக்கையும் சிலம் பதிகாரத்தில் காணலாம். 2.5.11 ஒரே செய்தியை (ஊர்வசி சாப வரலாறு) வரி- ணனையாகவும், கிளைக்கதையாகவும் எடுத்தாண்டுள்ள