________________
3 3. மணிமேகலையில் கிளைக்கதைகள் 3.1 சிலப்பதிகாரத்தை ஒட்டித் தமிழுக்குக் கிடைத்த மற்றொரு காப்பியம் 'மணிமேகலை'. மதுரைக் கூலவாணி கன் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பட்ட இந்நூல் 'பௌத்தம்' பேச எழுந்தக் காப்பியமாகும். சிலப்பதிகாரத் தீன் மையக்கதையும், மணிமேகலையின் மையக்கதையும் தம்முள் தொடர்புடையன. மணிமேகலை, மாதலியான் துறவு நெறிப்படுத்தப்பட்டு, அவ்வாழ்க்கையை மேற்கொண் பின் அடையும் துன்பமும் அனுபவமுமாகிய வாழ்க்கை- யைப் பேசுவதும், இறுதியில் புறப்பகை அகப்பகைகடந்து பவத்திற மறுகெனப் பாவை நோற்று நின்றதும். ஆகிய மேகலை ஒருத்தியின் வாழ்வைப் பற்றி முழுக்க முழுக்கப் பேசுவதே மணிமேகலையின் மையக்கதையாகும். இம்மை யக்கதை மணிமேகலையைத் தலைமைப் பாத்திரமாகவும், மாதவி, உதயகுமாரன், சுதமதி, மணிமேகலா தெய்வம், அறவண அடிகள் ஆகியோரைத் துணைப் பாத்திரங்களாக ஷம், சித்ராபதி, அரசமாதேவி, தீவதிலகை, ஆதிரை போன்றவர்களைச் சிறுபாத்திரங்களாகவும் கொண்டு திகழ் கிறது." 3.2.1 மணிமேகலைக் காப்பியத்தில் 19கிளைக் கதைகள் உடலின் உறுப்பாக அமைந்து நிற்கின்றன. இக்காப்பியத் தக்கிளைக்கதைகளால் கட்டப்பட்ட காப்பியம் என்றே கூறலாம்.அந்த அளவிற்குக் கிளைக்கதைகள் மையக்கதையை