பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காப்பியத் தலைவனான உதயகுமாரன், சுதமதியிடம் அஞ்செஞ் சாய லராந்தா ணத்துள்ளோர் விஞ்சைய னிட்ட விளங்கிழை யென்றே கல்லென் பேரூர்ப் பல்லோ ருரையினை ஆங்கவ ருறைவிடம் நீங்கி யாயிழை 55 சங்கிலள் தன்னோ டெய்திய துரையென வலியக் கேட்க, சுதமதி தன் பின்வாழ்க்கைக் கதையை எடுத்துரைக்கிறாள். இக்கதையை, சாத்தனார், புத்தமதத் தைப் போற்றுவதற்காக வலிய படைத்துக் காட்டியுள்ளார். சுதமதி சமண மதத்தில் இருந்தும், புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினனாய்க் கையற்ற நிலையில் இருந்த சுதமதியின் தகப்பன் கெளசிகனைப் போற்ற மறுத்த சமண மதத்தின் தாழ்வைச் சுட்டி, பிற மதத்தில் இருப்பவராயி. னும், கையற்ற நிலையில் அதைப் போற்றாது உதவிய பௌத்த மதத்தின் மேன்மையையும் சுட்டுகிறார். இக்கதை மூலம் சாத்தனார், அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின் அறக்கதி ராழி திறப்பட உருட்டிக் காமற் கடந்த வாமன் சிறப்பையும், அவன் பாதம் வணங்கும் அடியவரின் அருள் திறத்தையும் எடுத்துக்காட்டுகிறார். இக்கதையும், துணை மாந்தரின் வாழ்க்கையைப் பேசுவதால் காப்பிய மையக்- கதையுடன் இணைந்து நின்று, ஒட்டிய கிளைக்கதையாகத் திகழ்கிறது. இவ்விரு கிளைக் கதைகளின் மூலம், சுதமதி, மோலை- யூடன் சிறுபிராயம் முதல் பழகிய தோழி அல்ல என்பதை யும், மேற்கொண்ட சமயத்தால் இணைந்து தோழி என்ப தையும் அறிய முடிகிறது.