________________
48 சிறப்பாகச் சொல்லப் போனால், இக்கதை மூலம் சாத்- தனார் பௌத்தமத உயர்வையும், பிராமணர்களின் மூட நம்பிக்கைகளையும் மிக அழகாகச் சுட்டிக் காட்டியிருக்கி றார். சாத்தனார், ஒரு தீவிர சமயவாதியாக இருந்தாலும். சிறந்த பகுத்தறிவாதியாகவும் திகழ்வதை இக்கதை எடுத்- துக்காட்டுகிறது. காப்பிய மையக்கதை ஓட்டத்திற்கு, இக் கிளைக்கதை எந்தவிதத்திலும் உறுதுணைப் புரியவில்லை என்றாலும், அம்மையக் கதை பேசும் சமயத்தை இக்கதை பேசுவதாலும், காப்பியக்கதை மாந்தருள் ஒருத்தியானமணி மேகலா தெய்வம் இக்கதையைக் கூறுவதாலும், இது காப் பியத்துடன் இணைந்து நிற்கிறது. எனவே, இதை ஊன்று கிளைக்கதையாகவே கொள்ளமுடிகிறது. 3.4.4 மணிமேகலையின் முற்பிறப்புக் கதை 1:- மணிமேகலை, தன் காந்தளஞ் செங்கையைத் தலை மேல் குவித்து, புத்த பீடிகையை, இடமுறை. வலமுறை சுற்றி வணங்கி எழுந்து, முற்பிறப்பை வழுவின்றி உணர்ந்த- பீன்,தனக்கு முற்பிறவியில், இப்பிறவி உணர்ந்திய பிரம. தருமன் என்ற முனிவனை அகக்கண்முன் முன்னிலைப் யடுத்தி, தன் முற்பிறப்பு வரலாற்றைக் கூறுகிறாள். இப்படிக் காப்பியப் பாத்திரமல்லாத ஒரு பாத்திரம் கிளைக்கதை- யைக் கேட்பதாக, மற்ற எந்தக் கிளைக்கதையுமே அமைய. வில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். . . இக்கதை, முற்பிறவியில் மணிமேகலை இலக்குகி என்ற பெயருடன், இரவிவர்மன் என்ற அரசனுக்கும். அமுதபதி என்னும் அரசிக்கும் மகளாக இருந்து வளர்ந்ததைக் கூறுகி- றது. பின், இராகுலன் என்பவன் மனைவியாகி.அவன் திட்டி விடம் கடித்து இறக்க, அவனுடன் இவள் உயிர் துறந்ததா- கக் காட்டப்படுகிறது. பிரமதருமன் என்ற முனிவன் அரு- னால் முற்பிறவியிலேயே இப்பிறவியில் நடப்பதையும்