பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 முதலில் கூறிய முற்பிறப்புக் கதையின் தொடர்ச்சி இக் கதை என்றாலும், சொல்லும் நோக்கம் மாறுபடுவதால் இதைத் தனி ஒரு கிளைக் கதையாகக் கொள்ள முடிகிறது. மணிமேகலை உதயகுமாரனால் சலனம் எய்தி, புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம் இதுவோ அன்னாய் காமத் தியற்கை இதுவோ யாயிற் கெடுகதன் றிறமென . முன்பு சுதமதியிடம் கூறினாள் என்றாலும், உதய குமாரன் மேல் அவள் வைத்த பற்றை முழுவதுமாக அகற்ற முடிய. வில்லை. அதற்குத் தக்கதொரு காரணத்தை இக்கிதைமூலம் சாத்தனார் படைத்துக் காட்டுகிறார். தவிர, மேகலையை, உதயகுமாரன் யார் என்பதை அறிந்து செயல்படவைக்கிறது இக்கதை. இவ்வாறு, இக்கிவைக்கதை,காப்பியத் தலைமைப் பாத்திரத்தின் முன்வரலாறாகவும் அவள் மனசலனத்திற்கு ரிய காரணத்தைத் தெளிவுபடுத்தும் கதையாகவும் விளங்கு. வதால் தை ஒட்டிய கிளைக் கதையாகக் கொள்ள முடிகி- றது. + 3.4.6. மாதவி சுதமதி ஆகிய இருவரின் முற் பிறப்புக் கதை இக்கதை இருபகுதியாக இருவேறு இடத்தில் பேசப்படு கிறது. முற்பிறப்பு வரலாற்றைக் கூறி, வினைப்பயனை உண. ரவைக்கும் நோக்கத்திலேயே இவ்விரு பகுதிகளும் அமைந். திருப்பதால் இவற்றை ஒரே கிளைக்கதையாகக் கொள்ள லாம். முற்பகுதியை, மணிமேகலா தெய்வம் மணி மேகலை கேட்கச் சொல்லுகிறது. பிற்பகுதியை அறவண அடிகள் மணிமேகலை, மாதவி, சுதமதி கேட்கச் சொல்லுகிறார். காரணமில்லாமல், இப்படிக் கதைப் பகுதியைப் பிரித்து இரு வேறு இடத்தில் இருவேறு கூற்றில் சொல்லியிருப்பதால் காப்பிய ஒருமையும், காப்பியக் கட்டுக்கோப்பும் சிதைகிறது.