________________
5.2 இக்கதை மூலம் கூறி, 'இப்படிப்பட்ட கொடிய பசிப்பிணி யைத் தீர்க்க வேண்டும் நீ' எனத் தீவதிலகை மணிமேகலை விடம் கூறுகிறது. சதை முடிவில் ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்க எரும்பசி களைவோர். மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே து ஏன அத்தெய்வம் அறம் கூறுகிறது. இவ்வரிகள் பௌத்தக் கொள்கையான 'பசிப்பிணி நீக்குதல்' என்ற அரிய அறத்தை விளக்கி நிற்கிறது. இக்கிளைக்கதை, காப்பிய மையக்கதை பேசும் பௌத்தமதக் கொள்கையைப் பேசுவதால் காப்பியத் துடன் இணைந்து நிற்கிறது மையக்கதையுடன் சமயத் தொடர்பால் மட்டும் இணைவதாலும், காப்பியத்தில் இதன் பயன்பாடு அவ்விடத்திலேயே முடிந்து விடுவதாலும் இதை ஊன்று கிளைக்கதையாகவே நொள்ள முடிகிறது. து 3.4.8 ஆயுந்திரன் கதை {காப்பியத்துள் காப்பியம்) மாபெரும் பாத்திரம் மடக்கொடிக் கருளிய ஆபுத் திரன்நிறம் அணியிழை கேளாய் ஏன் அறவண அடிகள் ‘அமுதசுரபி' நல்கிய ஆபுத்திரன் T- வாற்றை மணிமேகலையிடம் கூறுகிறார். ஆபுத்திரனின் பிறப்பு, வளர்ப்பு, அவன் 'அமுதசுரபி' பெற்ற வாலாறு. அதன் மூலம் அற்றார் பசி தீர்த்த செய்கை, பின்பு அழுத சுரபியைப் பயன்படுத்த முயலாமல் போனது, அதைக் கோமுகிப் பொய்கையில் விட்டு, இறந்தது என ஆபுத்திரன் பிறப்பு முதல் இறப்பு வரை நடந்தவற்றை இக்கதையின் மூலம் சாத்தனார் எடுத்துக்காட்டுகிறார். இது தவிர, மனு பிறவியில் ஆபுத்திரன் ஆவயிற்றில் பிறந்தது, பின்பு மன்னன் ஆனது என்ற நிகழ்ச்சிகளையும் இணைத்துக் கூறுகிறார்.