பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 செல்லல். அவன் இறந்ததாக ஆதிரை தீப்பாய்தல், தீ அவளை அணுகாமை, பின் அசரீரி ஒலித்தல், ஆதிரை மகிழ்ந்து இல்லம் செல்லுதல் என்ற செய்திகள் கதைப்படுத்திக் கூறப் படுகின்றன. ஆதிரையின் கற்பு,அக்கற்பின் மாண்பால் அவள் வாழ்க்கையில் அடைந்த மேன்மை, அதனால் காப்பியத்தில் அவள் பெற்ற ஏற்றம் என்றநிலைகளில்‘கற்பு' என்ற ஒன்றே இக்கதையில் தலைமை பெறுகிறது. இப்படிப்பட்ட கற்பு- டைய மாது இட்ட பிச்சை அமுதசுரபியை வளம் பெறச் செய்கிறது எனச் சாத்தனார் படைத்துக்காட்டுகிறார். இக்கதையின் மூலம் சாத்தனார். தக்கவர் மூலம் பெறப்- படும் செல்வம் பெருகற்பாலது கான்பதையும் பெண்மை- யின் மனத்திண்மையான கற்பு என்பது தெய்வீக ஆற்றலு- டையது என்பதையும் எடுத்துக்காட்டுகிறார். இக்கதையின் பயன்பாடு, மையக்கதையைப் பொறுத்தவரை, ஆதிரைப் பிச்சையிட்டு அமுதசுரபி பெருகியதுடன் நிறைவு பெற்றுவிடு. கிறது என்றாலும், காப்பிர முக்கிய நிகழ்ச்சியான அமுத- சுரபியை வளம்பெற வைத்த நிகழ்ச்சிக்கு அடிப்படைக் கார ணமாகவும் அமைவதால் இதை ஒட்டிய கிளைக்கதையாகக் கொள்ள முடிகிறது. 3.4.10 சாதுவன் வரலாறு ஆதிரையின் கணவன் சாதுவனின் அனுபவத்தைப் பேசும் கதை இது. சாத்தனார் பௌத்த மதக்கொள்கை- களைப் பேச வேண்டும் என்பதற்காகவே இக்கதையைப் படைத்துள்ளார். இக்கதை மிக விரிவாகப் பௌத்தக் கொள்கைகளைப் பேசுகிறது. நாகர் இனத்தலைவனுக்கு சாதுவன் கூறும் அறிவுரைகள் யாவும் பௌத்தமதக் கொள்கையின்பாற் பட்டனவேயாகும். உயிரைக் கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள்ளுண்- ணாமை, போகம் அனுபலிக்காமை, மறுபிறப்பில் நம்பிக்கை என்ற ஐந்து பௌத்தக் கொள்கைகனை இக்கதை வாயிலா