________________
68 படும் காயசண்டிகை என்ற விச்சாதரப் பெண்ணின்' கதை இது விருச்சிகன் என்ற முனிவன் உண்ண வைத்திருந்த பழத்தை, காயசண்டிகை அறியாமல் சிதைத்ததால், யானைத் தீப்பசி என்ற கொடிய நோய்க்கு ஆளாகிறாள். 'பதி வந்திடப் பத்தும் பறந்து போகும்' என்பது பழமொழி. காயசண்டிகைக்குப் பசி வந்திட, விச்சாதர உலகம் செல்ல சொல்லும் மந்திரமே மறந்துபோய் அவதிப்படுகிறாள். வயிறுகாய் பெரும்பசியால் 12 ஆண்டுகள் அவதிப்பட்ட காயசண்டிகையின் துன்பத்தை மணிமேகலை அமுதசுரபி யின் உதவியால் போக்கினாள். பசிதீர்ந்த காயசண்டிகை. மேகலையை நெறிப்படுத்துகிறாள். ஊ ரூ ராங்கண் உறுபசி உழந்தோர் ஆரும் இன்மையின் அரும்பிணி யுற்றோர் இடுவோர்த் தேர்ந்தாங் கிருப்போர் பலர் 1* உலகறவறவியின்பால் உள்ளனர். அவர்களிட சென்று, மேகலைப் பசிப்பிணி நீக்குதல் வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறாள். இக்கதையைச் சாத்தனார், பசிப்பிணி, மானிடர்களை மட்டுமன்றி, தெய்வத்தன்மை பெற்ற விச்சாதரர்களையும் பாதிக்கிறது என்பதைக் சுட்டிக்காட்டப் படைத்துள்ளார். மிக்ககொடிய யானைத்தீ பசியையும் தீர்த்தவள் மேகலை எனப்படைத்துக்காட்டி, அவள் பாத்திரத்தையும், இக்கதை மூலம் உயர்த்துகிறார். காயசண்டிகை என்ற துணைமாந்தர் கதையாக இக் கதை விளங்குகின்றது. காயசண்டிகை என்ற பாத்திரத்தை இக்கதை மூலமாகவே நாம் இனங்கண்டுகொள்ள முடிகிறது பின்னால், காயாண்டிகையின் கணவனால் உதயகுமாரன் கொலையுறப் போகிறான். திடீரென்று காயசண்டிகை கண. வனைக் கொண்டுவந்தால் காப்பிய ஓட்டத்தில் தெளிவு