பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 செய்த தீவினையே, இப்பிறப்பில் உறுத்து வந்து ஊட்டியுள்- ளது எனத் தெளிவு படுத்துகிறார். இப்படித் தலைமைப் பாத்திரத்தின் முற்பிறப்பு வரலாற்றை விளக்குவதாகவும், மையக்கதை நிகழ்ச்சிக்குத் தெளிவு தருவதாகவும் இக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், இதை ஒட்டிய கிளைக் கதையா- கக் கொள்ள முடிகிறது. 3.4.13 கந்திற் பாவையின் வரலாறு சுவரில் உள்ள பாவையானது தான் பேசுவதைக் காப்- பீயத் தலைவியான மேகலை நம்ப வேண்டும் என்பதற்காக. தன் வரலாற்றைத் தானேக் கூறுகிறது. காப்பியத்தில் இக். கிளைக்கதையின் பயன்பாடு மிகக்குறைவு. மேகலை சுந்திற் பாவையின் வரலாற்றைக் கேட்பதால்தான், தன் ஐயம் நீங்கி, அத்தெய்வத்தின் மொழியை நம்புகிறாள். இப்படி இதன் பயன்பாடு தோன்றிய சூழலிலேயே முற்றுப்பெற்று விடுவதால் இதை ஊன்று கிளைக்கதையாகக் கொள்ள முடிகிறது. 3.4.14 மருதி பற்றிய கதை இது, ஒரு எடுத்துக்காட்டுக் கதை. இக்கதையைச் சக்- கரவாளக்கோட்ட முனிவர்கள் சோழ மன்னனுக்கு எடுத்து- ரைக்கின்றனர். உதயகுமாரனின் திடீர் இறப்பைக் கேட்டு மன்னன் அதிர்ச்சியும், சினமும் எய்தாமல் இருக்கவும், அவனை அமைதி செய்தற்பொருட்டும், இக்கதையையும், அடுத்துவரும் கதையையும் கூறி, மன்னனை ஆற்றுவிக்கின் றனர் முனிவர்கள். இக்கதையில், மருதியினை விரும்பும் ககந்தனது இளைய மகன் பற்றியும், மருதி 'பிறர் நெஞ்சு புகுந்தமையால் வருந்தியது' பற்றியும் செய்திகள் இடம் பெறுகின்றன. இக்கதை மூலம் சாத்தனார் கீழ்க்கண்ட நீதிகளை எடுத்துரைக்கின்றார். 1. பெண்களுக்கு, மறந்தும் பிறர்நெஞ்சு புகா கற்பு' இருக்க வேண்டும்.