________________
73 ளச் செய்தது என்ற செய்தியை இக்கதை வாயிலாக மேகலை அறிந்துகொள்கிறாள். இக்கதைப் பகுதி பொருத்தமான இடத்தில், பொருத்தமானக் கூற்றாக அமைந்துள்ளது. முதற்பகுதி கதை இல்லாவிடில் இப்பகுதிக்க்தை தெளிவடை- யாது. இருந்தாலும், முதற்பகுதிக் கதையை, அங்கே கூறா - மல், இப்பகுதியுடன் இணைத்தே கூறியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும். திரும்பவும் சாத்தனார் இதே பீலிவளைக் கதையை மணிமேகலையிடமே. அறவண அடிகள் கூறுவதாக அமைத்- துக் காட்டியிருக்கிறார். கேட்கும் பாத்திரமும், நோக்கமும் ஒன்றாகவே அமைந்திருக்க, அதே கதையைத் திரும்பக் கூறு- வது பொருத்தமாக இல்லை. இது, கூறியது கூறல்' என்ற குற்றத்தின் பாற்படும். இதனால் காப்பிய ஒருமையும் கட்டுக்கோப்பும் சிதைகிறது. கதைக் கூறப்பட்டிருக்கும் விதத்தில் குறைபாடு இருந்- தாலும்.இப் பீலிவளைக்கதை அழகான காதல் கதையாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. இவ்வரலாற்றுக் கிளைக்கதை, யை ஒட்டித்தான், 'மயிலிறகு' என்ற நாவலைப் படைத் துள்ளார் திரு கோவி. மணிசேகரன். இப்படிப் படிப்பவர் மனதை அள்ளித் தன்பால் ஈர்ப்பது இப் பீலிவளைக் கதை. சாத்தனார் இதைப் பகுதி பகுதியாகக்கூறி, கதையின் ஒரு- மையையும், காப்பியக் கட்டுக் கோப்பையும் சிதைத்து விட்- டார். இக்கதையும்,ஒரு ஊன்று கிளைக்கதையாகவே கொள்- ளப்படுகிறது. காப்பியாட்டத்திற்கு இக்கதை துணைபுரியா விட்டாலும், மையக்கதையில் பேசப்படும் நகரமான புகா- ரின் அழிவிற்குக் காரணத்தைக் கூறுவதால், இக்கதை மையக்கதையுடன் ஒன்றி நிற்கிறது. இதை ஊன்று கதை- யாகக் கொள்ளலாம். 3.4.17 கண்ணகியின் முற்பிறப்புக்கதை சிலப்பதிகாரத்தில் கிளைக்கதையாக வந்துள்ள இக்-