________________
75 பயன்பாடு கருதி இதை ஊன்று கதையாகவேக் கொள்ளமுடி கிறது. மேகலையின் வினாவிற்கு விடையாக அமைவதுடன் இக்கிளைக்கதையின் பயன் நிறைவு பெற்றுவிடுகிறது. 3.4.18 முன்னோன் கோவலன் கதை கண்ணகியின் கணவனான கோவலனின் ஒன்பது தலை- முறைக்கு முந்திய கோவலனைப் பற்றிய கதை இது.இக் கதையை மாசாத்துவான் மணிமேகலைக்குச் சொல்லுகிறார் அக்கோவலன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு நண்- பனாக இருந்ததும், அவ்வரசனுக்கு தருமசாரணர், புத்தர் அருளிய வாய்மைகளை அறிவுறுத்தும்போது, உடன் இருந்து கேட்டு, அவ்வுரைப்பயனாக அறம் புலச் செய்ததையும், கச்சி- யில் புத்தனுக்குத் திருக் கோயில் எடுத்து சிறப்பித்ததையும். அதனால் சிறந்ததையும் இக்கதை பேசுகிறது. சாத்தனார் இந்தக் கோவலன் கதையை, மாசாத்துவான் கச்சி வந்த நோக்கத்தை விளக்கும் பொருட்டும், பௌத்த கொள்கை- களைப் பேசவும், கோவலன் பரம்பரையே பெளத்த சமயத்- தின்பால் பேரன்பு பூண்டது என்பதைக் காட்டுவதற்காகவும் எடுத்தாள்கிறார். இக்கதை, சாத்தனாரின் கற்பனைத் திறனுக்கும், புலா மைத்திறனுக்கும் ஒருசிறந்த சான்றாகும். கோவலன்வாழ்க்- கையையே முழுக்கமுழுக்கப் பேசும் சிலம்பில், அடிகள் காட்- டாத நிகழ்ச்சிகளை, சாத்தனார் இங்குப்படைத்துக் காட்டு. வதன் நோக்கம் அறிந்து இன்புறுதற்குரியது. மணிமேகலை பெளத்த சமயத்தைச் சார்ந்தது வியப்பான செயல் அன்று, அவள் தந்தைவழிமுன்னோர்கள் பௌத்தமதத்தைச்சார்ந்- தவர்களே எனக் காட்டுகிறார் தவிர, ஒன்பது தலை முறைக்கு முன்னர் இருந்தே பௌத்தம் தமிழகத்தில் காலூன்றி நின் றிருக்கிறது எனக்காட்டி, மறைமுகமாகப் பௌத்ததின் அழி வில்லாப்பெருமையையும், பழமையையும் சுட்டாமல் சுட்டு