பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 கிறார். இக்கிளைக்கதை காப்பிய ஓட்டத்திற்கு தேவையில். லாத கதை ஆதலால், இதை ஊன்று கதையாகவே கொள்ள முடிகிறது. 3.4.19 மணிமேகலா தெய்வம் கோவலன் பரம்பரைக் கு உதவிய வரலாறு அறவண அடிகள் மணிமேலைக்குக் கூறுவதாக இக்கதை அமைந்துள்ளது. சாத்தனார், மணிமேகலா தெய்வம் கோவ- லன் குடும்பத்திற்குச் செய்யும் உதவிக்குக் காரணமாக இக் கதையைப் படைத்துக் காட்டியுள்ளார். பல அறங்கள் செய்த கோவலனின் முன்னோன் ஒருவன், கடலுள் செல்லும் போது மரக்கலம் மூழ்கிய நிலையில் ஏழுநாள் சாவாது இருக்கிறான். அதுகண்டு,இந்திரக் கம்பளம் நடுங்க அவன் வாய்மையை உணர்ந்த இந்திரன் மணிமேகலா தெய்வத்தை அனுப்பி அம்முன்னோனைக் காப்பாற்றுகிறான். அன்றுமுதல், அக்- குலத்தினருக்கே அத்தெய்வம் உதவி செய்து வருவதாக இக்- கதைச் சுட்டுகிறது. இக்கதையை இளங்கோவடிகள் சிலம்பிலும் எடுத்தாண் டுள்ளார். அங்கு மாடல மறையோன் வாயிலாக கிளைக் கதைக்குள் ஒரு நிகழ்ச்சியாக கூறப்பட்டுள்ளது. இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல் உடைக்கலப்பட்ட எங்கோன் முன்னாள் புண்ணிய தானம் புரிந்தோ னாகலின் நண்ணுவழி இன்றி நாள்சில நீத்த இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் வந்தேன் அஞ்சல் மணிமே கலையான் உன்பெருந் தானத் துறுதி பொழியாது துன்ப நீங்கித் துயர்க்கட வொழிகென விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த எங்குல தெய்வ