பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

78 தைப் பொறுத்தவரை பேணப்படாமல் போய்விடுகிறது. தவிர மைக்கத்யிைனூடே சாத்தனார் அடிக்கடி. கிளைக் கதைகளை மிகவிரிவாக எடுத்தாள்வதினால், மையக்கதை இடையீடுபட்டு, தொடர்ச்சி அறுபட்டு சிதைந்து நிற்கிறது. அதனாலே தான் சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள் தரும் இலக்கியச்சுவையை இக்காப்பியத்தினால் தர முடியவில்லை மேலும், கிளைக்கதைக்கும் காப்பியக் கட்க்டுகோப்பிற் கும் இடையே உள்ளத் தொடர்பை இக்காப்பியத்தின் மூலம் நன்கறியலாம். கிளைக்கதையை அளவோடு, சுருக்கமாக எடுத்தாளாவிடில், காப்பிய அமைதி கெடும் என்பதற்கு இக்காப்பியம் தக்கதொரு ஈான்றாகும். சாத்தனார் படைத்துள்ள சில கிளைக்கதைகள் காப் விய அழகுடையன என்பதையும் சுட்டாமல் இருக்க முடியாது 'ஆபுத்திரன் கதை' படைக்கப்பட்டுள்ள வீதமும், கதையழ கும் படிப்பவர் மனதை விட்டு நீங்காத் திறனுடையது. 'சக்கரவாளக் கோட்டம் எழுந்த கதை' பௌத்த அறத்தை மட்டுமல்ல உலக நீதியையேப் புகட்டுகிறது. ஆதிரை, விசாகை, மருதி போன்றோரின் கதைகள் கற்பின் துதிபாடி. பெண்மையின் மேன்மையைச் சுட்டி நிற்கின்றன இப்படி தனிப்பட்ட நோக்கில், சாத்தனாரின் புலனமக்குச் சான்- நாக விளங்கும் இக்கிளைக்கனதகள், ஒருமை நோக்கில் காணும் போது; காப்பியக் கட்டுக்கோப்பை சிதைக்கின்றன என்னும்போது, தொகுப்புத் திறன் காப்பியப் புலவனுக்கு எத்தனை அவசியமானது என்பதை புரிந்துகொள்ள முடி கிறது. . 3.6 மணிமேகலைக் காப்பியக் கிளைக் கதைகளின் சில தனி இயல்புகள் கிளைக்கதைகளின் அமைப்பும், அவைப் படைக்கப்பட் டிருக்கும் விதமும் காப்பியத்திற்குக் காப்பியம் வேறுபட