________________
8! 12. சாத்தனார் கிளைக்கதைக்குக் கொடுத்த முக்கியத்- துவத்தை, அவர், அக்கிளைக்கதை பாத்திரங்களின் பெயர்- களினால் காதைப் பெயர்கள் அமைத்துள்ளமை கொண்டு அறியலாம். மணிமேகலையில் இப்படி அமைந்த காதைகள் மொத்தம் ஆறு ஆகும். ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை, ஆதிரை பிச்சையிட்ட காதை, கந்திற்பாவை வருவதுரைத்த காதை, ஆபுத்திரன னாடு அடைந்த காதை, ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை என்ற ஐந்தும் கிளைப் பாத்திரப் பெயரைக் கொண்டு திகழ்கின்றன. சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை கிளைக்கதைப் பொருளையே தலைப்பாகக் கொண்டு திகழ்கிறது. 13. சாத்தனார், மூன்று கிளைக்கதைகளைப் பகுதி குதியாகப் பிரித்துக் கூறிக் கதையின் ஒருமைப்பாட்டைச் கிதைத்துள்ளார். 14.சாத்தனார், 'காப்பியக் கிளைக்கதைகளைக் கூறி, அதிலிருந்து நீதிக் கருத்துக்களை உய்த்துணர வைத்தல் வேண்டும்' என்ற சொள்கையில் நம்பிக்கையில்லாதவர். எனவே, கிளைக்கதைகளில் ஆங்காங்கே கதைப்போக்கை நிறுத்திவிட்டு அறம் பேசுகிறார். இப்போக்கை மற்றக் காப்பியங்களில் காண்பதரிது. 15. மணிமேகலைக் காப்பியத்தில் ஆபுத்திரன் கதை ஒன்றை மட்டுமே ஒன்றிய காதையாகக் கொள்ள முடிகிறது. தவிர, இக்காப்பியத்தில் உள்ள மற்றக் கிளைக்கதைகளை ஒட்டிய கதையாகவும், ஊன்று கதையாகவுமே கொள்ள முடிகிறது. ஒட்டிய கதை ஒன்பதாகவும், ஊன்று கதை ஒன்பதாகவும் சம அளவில் அமைந்துள்ளன. 16. முடிவாக, சாத்தனாரின் 'இலக்கியக் கொள்கையை அவர் படைத்துள்ள கிளைக்கதைகளின் மூலமே: உய்த்துண ரலாம். காப்பிய அமைதி கெடுவதையும் பொருட்படுத்தா-