ணையற்ற வீரன் பட்டதா? நேரிய முறையில் எதிர்ப்பதென்னும் தமிழத் தன்மையைப் பெரிதாக நினைத்தாய்! உன் ஆவியைச் சிறிதென மதித்தாய்! அப்பனே ! உனது தமிழத் தன்மைக்கு உன் ஆவியை அர்ப்பணம் செய்தாய்! மறைந்திருந்து திடீரென்று சூழ்ந்த ஆரியரை நீ நகைத்தாய்! வஞ்சகர் ஆயுதந்தாங்கி உன் முதுகின் புறத்திற் சூழ்ந்துகொண்டபோதும் உன் உயிரை மதியாமல், சிங்கத்தோல் போர்த்த பேடியை நோக்கி, "தூணை உதைத்தேன், நாராய ணன் வந்தான்; நாராயணனை உதைத்தால் தூண் வெளிப்படுமா?" என்று கூறி நகைத்து - நகைச் சுவைக்கு இலக்கியம் சேர்த்தாய்! ஆரியர் பொய்யை, கடவுள் பூச்சாண்டியை உதைத்தெறியும் பணியை உன் உயிர்போகும் நேரத்திலும் மேற்கொண்டாய்! 81 அண்ணலே! மறைந்தாயா! இனி உன் வீரப் எங்குக் கேட்பேன்? வீரப் பார்வை பேச்சை யாரிடம் உண்டு? தமிழ் வளர்த்த தமிழா! தமி ழறிந்த தமிழா! தமிழரைக் காத்த தமிழா! தமிழ் மக்கட்கு இடையூறு நேர்ந்தால் இனி யாரிடம் முறையிடுவது? அந்தோ! பேடித்தனம் நிறைந்த ஆரியர் உன்னைப் பின்னிருந்து குத்தியதை இந்தப் பாவி பரர்த்தும் சும்மாவிருந்தேனே! இந்தப் பாழும் தோள்கள் சும்மா இருந்தனவே! இதன்பொருட்டு நான் எனக்கு இடும் தண்டனை என்ன? இந்நாட் டிற்கு நான் அரசனாக அமைவதுதானா? அந்தோ! "சக்ரவர்த்தியைக் கொன்றதுமல்லாமல் அவன் F. 6.
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/100
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை