________________
xvi 39. "மேற்கு திபேத்தையும் ஆப்கானிஸ்தான மலைப் பிரதேரங்களையும் தாண்டி முதன் முதல் இந்தியா வுக்குள் வந்த ஆரியர்கள் சமஸ்கிருதத்தைப்போன்ற ஒரு பாஷையைப் பேசினார்கள். இந்தியாவுக்கும் ஆதியில் நுழைந்த இந்த வெள்ளையர்கள் தங்கள் சட்டதிட்டங்கள், பழக்கங்கள், கவிதைகள், மத நம்பிக்கைகள் முதலியவைகளை இந்தப் பாஷை யிலேயே எழுதி வைத்துக்கொண்டனர்." ஸர். ஹாரி ஜான்ஸ்டன், 0, 0. M. G., K. c, B. "இக்தியாவில் அன்னியர்கள்" (1913) (பக்கம்-19) 40. "சாதாரணமாக ஒரு தமிழ்காட்டு பிராம்மணன் தமிழைவிட இங்கிலீஷில் சரியாகப் பேசுகிறான்; தமிழைவிட இங்கிலீஷில் அதிக தாராளமாகவும் அதிக வேகமாகவும் பேசுகிறான்; தமிழைவிட இங் கிலீஷையே அடிக்கடி அதிகமாகப படிக்கிறான். சுருங்கச் சொன்னால், இஸ்கிலீஷ் பாஷையைத் தன் னுடைய சொந்த பாஷையாகவே ஏற்படுத்திக் கொண்டுவிட்டான்.” Dr. சில்பர்ட் ஸ்லேட்டர், M. A., D. No. மாஜி பொருளாதார ப்ரொபஸர், சென்னை சர்வகலாசாலை, "இந்தியக் கலையில் திராவிடப்பகுதிகள்"- (பக்கிம்-62)