பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இணையற்ற வீரன் ரபானு:- அந்தோ! [ பார்த்துவிட்டுத் தலை குனிந்து] என் கற்புக்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டதா! பாழான ஓ நெஞ்சமே! எனக்கு அபகீர்த்தியை உண்டாக்கி விட்டாயா! குரங்கு மனமே! உன் கண்ணில் காணும் கிளைகளிலெல்லாம் தாவி விடுவது உனக்குப் பெருமையாகுமா? ஆரிய வம்சத்துக்கு என்னால் அவமானம் நேர்ந்து விட்டதல்லவா? முதலில் நான் ஒரு புமானை என் மனத்தில் காதல னாக அடைந்து விட்டேன், ஆயினும் அந்தப் புமானை நான் நேரில் கண்டதில்லை. எப்படியிருந் தாலும் அவரே எனது உயிர்; அவரே எனது மணாளர் அவரைவிட நான் வேறொருவர்மேல் ஆசை கொள்ளலாமா?வேறொருவர் மேல் என் செல்லுமாயின் என் கற்பு என்னவா கும்? கற்பிழந்த பெண் உலகிலிருக்கத் தக்கவளா? மனம் காங்கேயன்:- ஆரிய வனிதையே! இப்போது உனது நெஞ்சம் எந்தப் புமான்மீது சென்றதோ, அந்தப் புமான் தகாதவனல்லவே! சென்றது? சித்ரபானு:- இப்போது தக்கவர்மேல் என் ஆசை சென் றதாயினும் இரண்டாவதாகத்தானே உம்மைப் பார்த்தால் ஓர் தோன்றுகிறது! நீரும் இப்படிப் பேசலாமோ? ஆர்யஸ்ரேஷ்டராகவே காங்கேயன்:- பெண்ணே! மன்னிக்கவேண்டும். நீ முன் னரே ஒருவர்மேல் ஆசை கொண்டிருப்பதை நான் எப்படி அறிந்திருக்க முடியும்? விரகலாதன்:- [நெருங்கி] முன்னால் நீ எவனுருவத்தைப் பார்க்கவில்லையோ அவன்மீது காதல் கொண்டு