இரணியன் சித்ரபானு:- இந்தத் தேசமே. பெயரை நான் எப்படிச் சொல்லுவது? 10 ப்ரகலாதன்:- இந்தத் தேசமானால் யாருடைய மகன்? சித்ரபானு:- எனது மாமனார் பெயரை நான் கூறமாட் டேன். ப்ரகலாதன்:- உனது மாமனாருக்கு என்ன வேலை? சித்ரபானு: அவர் ஒரு வேலைக்காரர் அன்று. அவர் ஒரு சக்ரவர்த்தி. ப்ரகலாதன்:- (ஆச்சரியத்துடன்] அப்படியா! காங்கேயன்:- என்ன அற்புதம்! ப்ரகலாதன்:-- ஆனால் உனது காதலன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான்? சித்ரபானு:-- அவர் உலக சஞ்சாரம் செய்கிறார். ப்ரகலாதன்:- [வியப்புடன்] ஏன் என்று தெரியுமா? சித்ரபானு:- அவருக்குக் கூடிய சீக்கிரம் இளவரசுப் பட்டம் ஆகப் போகிறது. காங்கேயன்:- இதோ! ப்ரகலாதன்! ப்ரகலாதன்:-- நான்தான் அவன். (சித்ரபானு பறந்தோடி அணைத்துக் கொள்ளுதல். பரகலாதன் ஆவலோடு கட்டிக் கொள்ளுகிறான்) (பாட்டு-2) சித்ரபானு:- நாதா! என் கற்பு பரிசுத்தமானது. [முகத்தைக் கவனித்து முத்தத்தின் மேல் முத்தம் கொடுத்தல்]
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/29
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை