பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 இரணியன் மும் காங்கள் சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை. எங்கள் கர்மானுஷ்டானங்கள் பஹு உத்க்ருஷ்ட மானவை. அவைகளை ஒப்புக்கொள்ளாத எக்தத் தமிழனிடத்திலும் நாங்கள் சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை. எங்கள் வேதம், மதம், பழக்க வழக்கங்கள், ஜாதிக்கட்டுப்பாடு ஏன் உத்க்றாஷ்ட மானவை என்றால் அவைகள் கேவலம், சிற்றறிவும், சிறு தொழிலுமுள்ள மனிதனால் ஏற்படுத்தப் பட்டவை அல்ல. அவை கடவுனால் வகுக்கப் பட்டவை. பின்னும் அவை மனு முதலிய எங்கள் மஹரிஷிகளசல் ஒழுங்கு செய்யப்பட்டவையாகும். நார் என்றும் அசுார் என்றும் ராக்ஷஸர்க ளென்றும் தமிழர்களென்றும் சொல்லப்படும் இந் நாட்டு மக்கள் கடைத்தேறும்படியாக மேற்சொன்ன வேதாதிகளைக் கடவுள் ஏற்படுத்தியதோடு, பூகார் களாகிய எங்களையும் கடவுள் தமது முகத்தினின் அம் பிறப்பித்தார். ஆதலால் இக்காட்டு மக்களை நல்வழிப்படுத்துவதே எங்கள் வேலை. இந்த அபிப் பிரசயன்களுக்கெல்லாம் உமது தந்தையாராகிய ஹிரண்யச் சக்ரவர்த்தியானவர் விரோதமாக இருந்து வருகிறார். ஆயினும் தெய்வ பலம் எங்க ளிடம் இருக்கிறது. எங்களுக்கு ஒரு குறைவும் வராது, எமது நீர் பஹூரு புத்திமான். சிறு வயது முதல் ஆஸ்திக ஞானம்பெற்று விளங்குகிறீர். வேதத்தை அந்தாங்கத்தில் ஒப்புக்கொள்ளுகிறீர். எம்மையெல்லாம் உயர்வாக மதிக்கிறீர். வாழ்க்கை முறைகளை நீர் வெறுக்கிறதில்லை. எமது