16 இரணியன் ப்ரகலாதன்:--கண்மணி ! சித்திரபானு! நீ வருந்தாதே. கான் உனது தந்தை சொல்லியதுபோல் இங்கேயே இருந்துவிடுகிறேன். சித்ரபானு:- தந்தையே! இன்னொரு விஷயம் அல்லவா? எனக்குத் தக்க மணவாளர் கிடைத்தால் மூன்று மாதம் கோன்பிருப்பதாக கௌரிக்குப் பிரார்த்தனை செய்திருக்கிறேன். அதன்படி இன்று முதலே நோன்பிருக்க வேண்டுமா? இன்னும் சிலநாள் கழித் துப் பார்த்துக் கொள்ளலாமா? கஜகேது:- அடாடாடாடா! இன்றுமுதல் விரதமிருக்க வேண்டாமா? சித்ரபானு:- (வருத்தமாக] மூன்றுமாத காலம் நான் எனது காதலன் முகத்தில் விழிக்காமல் எவ்வாறு இருக்க முடியும்? (பர்துக்களில் ஒரு பெரியவர்:- முகத்தில் விழிக்கலாம்; ஆலிங்கன சம்சர்க்காதிகளை ரிக்கவேண்டும்; அவ்வாவதான்) ப்ரகலாதன்:- கண்மணி ! மூன்று மாதத்தையும் மூன்று நிமிஷமாகக் கழித்துவிடு. வருந்தாதே. என்ன செய்வது? ஒருமுறை பிரார்த்தனைசெய்து விட் டாய். நிறைவேற்றவேண்டும் என்று சொல்லுகி றார்களே. கழகேது:- அப்படியானால் காளைமுதல் கோன்பு துவக்க எல்லாம் சித்தப்படுத்துகிறோம். நீங்கள் அந்தப்புரம் சென்று வாருங்கள். [இருவரும் கைகோத்தபடி மறைதல்]
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/35
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை