பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற வீரன் காங்கேயன்:- [ஓடி வந்து] அப்பா! என்ன செய்தி? கஜகேது :-- காங்கேயனைத் தெரியுமா என்று ப்ரகலாதன் கேட்டான். நான் தெரியவே தெரியாது என்று சொல்லியிருக்கிறேன். கலியாண விஷயம் ரகசியமா யிருக்கவேண்டி யிருப்பதால் நீ யாரிடத்திலாகிலும் சொல்லிவிடக்கூடும் என்று சந்தேகப்பட்டான். என் மந்திர சக்தியால் நடந்தவைகளையெல்லாம் காங்கே யன் மறந்துவிடுவான் என்று சொல்லியிருக்கிறேன். நீ திருமணம் நடந்ததை மறந்து விட்டதுபோல் பாசாங்கு செய்யவேண்டும். தெரியுமா? 17 காங்கேயன்:- மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்பிக்கிறீரோ? வேண்டியதில்லை. கிடக்கட்டும். எனது தங்கையாகிய சித்ரபானு தந்திரமாக நடந்து கொண் டாளா? கஜகேது :- ஆஹா! அதில் உனக்குச் சந்தேகம் வேண் டியதில்லை. மேலும் இளவரசனாகிய ப்ரகலாதன் உன் தங்கையின் பேரில் பிராணனை வைத்திருக்கி றான். நாம் நினைத்துள்ள காரியம் பரதி முடிந்த தென்றே சொல்லவேண்டும். காங்கேயன்:- சும்மா சொல்லலாகாது. தங்கை சித்ர பானு நான் முன்பே சொல்லியிருந்தபடி ஸ்ருங்கார வனத்தில் ப்ரகலாதனிடம் வெகு சாகஸம் செய் தாள். ஆரியர் முற்போக்கிற்கும் தமிழர் அழிவிற் கும் சித்ரபானு தன்னைத் தியாகம் செய்தாள் என்றே சொல்லவேண்டும். F. 2.