இணையற்ற வீரன் தூதுவன்:-- சேவகரே! நான் அவசரமாகச் சக்ரவர்த்தி யைக் காணவேண்டும். 21 காவற்தாரன்:- விடைபெற்று வருகிறேன்: [அரசரிடம் சென்று வணங்கி] ராஜாதி ராஜரே! தங்களை அவ சரமாகக் காண ஒரு தூதர் வந்திருக்கிறார். இரணியன்:- உள்ளே வரவிடு. சேனகன்:- (தூதனிடம் வந்து] உள்ளே செல்லலாம். தூதுவன்:- (சக்ரவர்த்தியைப் பணிந்து] ராஜாதி ராஜ ராஜபாட்டையில் பெண்களுமாகப் ஆரியராகிய பெருங்கூட்டம் ஆடவர் களும் நின்று அட்டகாசம் செய்யும் கோலம் சொல்ல முடிய வில்லை: கூடிய சீக்கிரத்தில் எவனேர் நாராயண மூர்த்தி தோன்றித் தங்களையும் ஆரியர் வேதத்தை ஒப்பாத தமிழர்களையும் அழித்துவிடப் போகின்றா னாம். ஆகையால் ஆரியர்கள் கொள்கைப்படி நடப்பதாக உறுதிகூற வேண்டுமாம். பூணூல் தரித் துக்கொள்ள வேண்டுமாம். ஆரியர்களை வணங்க வேண்டுமாம். அவர்களுடைய ஆரியப் பாதிரிகள் சொல்லும் விதமாகக் கர்மானுஷ்டானங்களில் ஈடுபட வேண்டுமாம். தமிழர்களை நல்வழிப் படுத்தவே ஆரியக்கடவுள் இங்கு உற்பத்தி செய்தாராம். இன் னும் என்னென்னவோ சொல்லுகிறார்கள். ராஜ வாட்டை நிர்த்தூளிப்படுகிறது. தலை துள்ளிப் போகிறார்கள். (பாட்டு-5)
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/40
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை