பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 இரணியன் ப்ரகலாதன்:--சரி! அத்த இடத்தில் காம் இருவரும் ஆரிய வனிதையைக் கண்டது ஞாபகமிருக்கிறதா? காங்கேயன்:- சரியாய்ப் போவிற்று ! உனக்கென்ன பெண் பைத்தியம் பிடித்துவிட்ட காரணத்தால் இப்படியெல்லாம் நடவசத்தை நடந்த மாதிரி நினைக் கிறாயா? ப்ரகலாதன்:- அது நிற்க. அவள் என்மீது காதல் கொண்டது ஞாபகமில்லையா? காங்கேயன்:- சொல்வாருக்கு மதி இல்லாவிட்டாலும் கேட்பாருக்குத்தான் மதிகெட்டுப் போகுமா? ஆரிய வனிதை உன்போல் தமிழன்மீது காதல் கொள்ள துண்டோ? அதென்ன? ஞாபகமிருக்கிறதா? ஞாபகமிருக்கிறதா? என்று என்னைக் கேட்சி றாயே? எனக்கு ஞாபகம் எங்கும் போய்விட வில்லை. நீதான் வெறியன்போல் ஏதேதோ உளறு கிறாய். பிரகலாதன்:- சரி. நான்தான் உளறுகிறேன். விட்டுவிடு. காங்கேயன்:- பின்னென்ன? இப்போது சொன்ன இத் தனை பெரிய அராபிக்கதையா என்னெதிரில் கடக் தது? ப்ரகலாதா! உனக்கு உடம்பு சரியாவில் லையா? ஏதாவது மயக்கமுண்டா? உனக்குச் சித்தஸ்வாதீனம் கெட்டிருப்பதாய் நான் யூகிக்கி றேன். ப்ரகலாதன்:- காங்கேயா! கான் விளையாட்டுக்காக இவ் வாறு கூறினேன்; வேறொன்றுமில்லை.