37 இணையற்ற வீரன இத்ரபானு:-- அந்தோ! காதலரே! நான் உணர்கிறேன். நான் தங்கள்மேல் வைத்த காதல் கோயால் இறக் கும் தறுவாயிலிருந்ததைப் பார்த்தும் என் பெற்றோ ருக்கு என் மீது இரக்கம் பிறக்கவில்லை யென்றால் வேறு என்ன சொல்ல வேண்டும்? நான்கு தினங்க ளாக ஆரியருக்கு அந்த இரணியனால் நடத்தப் பட்டுவரும் தீங்குகளைச் சொல்ல முடியாது. இது தங்கட்குத் தெரியாதா? சேனாதிபதி:- கேள்வியுற்றேன். எவளோ ஒரு துஷ்ட ஆரியப் பெண் நடு நிசியில் சக்ரவர்த்தி பள்ளியறை யில் நித்திரை செய்கையில் ஈட்டியை எறிந்தாளாம். அரசருக்கு நடு மார்பில் காயமும் ஏற்பட்டதாம். எமது பெருந்தன்மையுள்ள தமிழ்ச் சக்ரவர்த்தி அப் பாதகியை மன்னித்து விட்டாராம். மேலும் ஆரி யர்கள் ராஜ பாட்டையில் நின்று அட்டகாசம் செய் தும் தமிழர் வாழ்க்கை முறைகளை இழிவுபடுத்தி யும் வருவதால் அவர்களை யெல்லாம் சிறைப்படுத்தி விருக்கிறார்களாம். இதுவுமன்றி ஆரியர் இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்கவேண்டுமென்ற கெட்ட எண்ணத்தோடு நடத்திய அநேக சூழ்ச்சிகளும். அர சாங்கத்திற்குத் தெரிந்திருக்கிறதாம். அதில் சம்பங் தப்பட்ட அநேக ஆரியர்களையும் சிறைப்படுத்தி யிருக்கிறார்களாம். சித்ரபானு:- ஆரியப் பெண்கள் மேலும் ஆரிய ஆடவர் கள் மேலும் சுமத்தியிருக்கும் இவ்வபாண்டங்களை யெல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா? சேனாதிபதி:- அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/56
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை