40 இரணியன் தாங்கள் மாளிகையிலிருந்தால்தான் போயிற்று! இல்லாவிடில்? சேனாதிபதி:- என் ஆருயிர்க் காதலி ! நானே அடிக் கடி வந்து போகிறேன். சித்ரபானு:- விரதம் முடியும் வரைக்கும் என்னை இனி நீங்கள் காணமுடியாது. நான் தேடியனுப்பித் தவ் களை உடனே அழைத்துக்கொள்ளுகிறேன். அக் தோ! தங்களை நான் மணம் முடிக்கும் வரைக்கும் ஒரு நாள் கழிவது ஒரு யுகமாக இருக்குமே! சேனாதிபதி:- கண்மணி! வருந்தாதே! திருமணம் சீக் கிரம் முடிந்துவிடும். இதோ முடிந்துவிடும்; அவ சரப்படாதே. சித்ரபானு:- அந்தோ! விரதம் எப்போது முடியுமோ தெரியவில்லையே! விரதம் முடியும் வரைக்கும் தங் களை தான் பார்க்கக்கூட முடியாதே! அதுவரை உங்கள் உருவப்படத்தையாவது பார்த்துக்கொண்டி ருக்கலாமா என்று கனபாடிகளைக் கேட்டேன். வேண்டாம், வேண்டாம்' என்று அந்தப் பாவிகள் தடுத்தார்கள். என் ஆருயிர் காதரே! உங்களிடம் நான் காதல் வசனங்களைக்கூட இப்போது உபயோ கப்படுத்தலாகாதாமே! உன்கள் செளந்தர்ய மூகத் தைப் பார்க்கப்பார்க்க என் காதல் பெருகுகிறதே! அந்தோ! என் முன் நிற்காதீர்கள். [முகத்தைக் கையால் மறைத்துக் கொள்கிறாள்.] அந்தோ! மறைக்தீர்களா? சேனாதிபதி:- வருத்தாதே. விரதத்தைப் பூர்த்திசெய். நான் போய் வருகிறேன். [மறைதல்.]
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/59
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை