இணையற்ற வீரன் இதோ! இருதினங்கட்கு முன்பு கான் தூங் கும்போது என்னை ஒரு பெண்ணைக் கொண்டு கொல்ல நினைத்தார்கள் அவ்வஞ்சகர்கள், எனது எட்டுத் தமிழர்களை ஆரியர்களிடமிருந்து காக்க என்னுயிரை நான் பொருட்படுத்தப் போவதில்லை. சபையோர்களே ! என் நியாய சபையை ஆரம்பிக்கி றேன். [அமர்தல்] 43. (இரண்டு சேவகர்கள் நான்கு பேரை ஒன் நாய்ப் பிணைத்தபடி கட்டி இழுத்துக்கொண்டு வந்து சபையில் நிறுத்துகிறார்கள்.] குற்றச்சாட்டின் விவரம் கூறுவோன்:- பெருமானே! இவர்கள் ஆரியச் சேரியினின்றும் அரசபாட்டையில் நுழைந்ததோடு, அரச பாட்டையில் கூட்டங் கூட்டித் தமிழரின் ஈடைகளை இழித்துக் கூறியும் ஆரியர்களின் தீய வாழ்க்கை முறைகளை உயர்த்திக் கூறியும், காராயணன் இங்குந் தோன்றி ஆரியரின் எதிரிகளையும் சக்ரவர்த்தியையும் அழிக்கப்போகி றான் என்று புளுகியும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இவர்களின் நாக்கை யறுக்கத் தீர்ப்பளிக்க வேண்டு கிறேன். இரணியன்:-- நாராயணன் வந்து என்னையும் தமிழர் களையும் அழிக்க இருக்கும்போது இவர்கள் ஏன் என் விஷயமாகச் சூழ்ச்சி செய்யவேண்டும்? நாரா யணனாவது என்னை கேரில் வந்து எதிர்ப்பானா? பேடித்தனமாகப் பின்னிருந்து அடிப்பானா? நன்று. இவர்களது கண்ணைப் பிடுங்கிவிடும்படி தீர்ப்பளிக்கிறேன். [போகிறார்கள்.]
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/62
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை