அத்தியாயம் 8. இடம்: கொலைக்களம். பாத்திரங்கள்: குற்றவாளிகன், ' கொலையாணிகள் ஈர்வ்வர், சேனாதிபதி, சித்ரபாலு. [ரூற்றவாளிகள் அனைவரும் கொண்டுவரப்படுகிறார்கள்] குற்றவாளி சார்பில் ஒருவன்:- சேனாதிபதியவர்களே! நாங்கள் நிரபராதிகள். எங்கள் உயிர் இப்போது தங்களிடம் இருக்கிறது. நீங்கள் மனம் வைத்தால் எங்களுக்கு மீட்சி கிடைக்கும். காங்கள் குற்றஞ் செய்தது உண்மையாக இருந்தாலும் இனிமேல் இவ்வாறு செய்வதில்லை என்று உறுதிகூறுகிறோம். எங்கள் பெண்டு பிள்ளைகள் பேரால் தங்களைக் கெஞ்சுகிறோம். சேனாதிபதி:-- சக்ரவர்த்தியின் தீர்ப்புக்கு மாறுதல் உண் டா? பேதைகளே ! கில்கள் இந்நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள். உங்களுக்கு இறுமாப் பென்ன? உங்கட்குச் சூழ்ச்சிகள் ஒரு கேடர் சக்ர வர்த்தியின் உயிருக்தா உலை வைக்க எண்ணினீர் கன்? தெய்வபலம் இருக்கிறது; நாராயணன் வரு கிறான்” என்று உனறுகிறீர்களே! இந்த ஏமாற்று களை யார் நம்புவார்கள்? 'வஞ்சகத்தால் உலகை வசப்படுத்துவதா உங்கள் திட்டம்? கொலையாளிகளே ! முதல் நால்வர் கண்களை யும் உங்கள் கூர்மையான ஆயுதத்தால் தோண்டி
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/65
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை