பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இரணியன் சித்ரபானு:- நாதரே! தமிழர்களின் பச்சை ரத்தம் பொங்கிக் கொண்டிருக்கும் இந்த வட்டப்பாறையின் அருகிலிருந்து உங்களுக்கு ஒரு நல்ல சேதி சொல்லு கிறேன். எல்லாம் ஆயத்தமாகி விட்டது. எங்கள் ஆரிய ஜனங்கள் அனைவரும் கூடி ஏற்படுத்திய திட்டத்தின்படி இந்நாட்டின் தற்காலச் சக்ரவர்த்தி சீக்கிரம் கொலை செய்யப்படுவான். ப்ரகலாதனை யும் தந்திரமாக ஏமாற்றித் தங்கட்கு முடிசூட்டப் படும். இது நிச்சயம் என்பதை மாத்திரம் உமக்குத் தெரிவிக்கும்படி ஆரியர்களின் தலைவர்கள் என் னிடம் சொல்லி வைத்தார்கள். சேனாதிபதி:- அப்படியா? இத்தனை பெரிய காரியங் களும் செய்து முடிப்பது சாத்தியமா? ஆயி னும் நீங்கள் மிக்க தந்திரசாலிகள் என்பதை நான் நம்புகிறேன். இதே நேரத்தில்கூட அந்த இரணியனைவிட நானே ஆளுந் திறமையிலும் புஜ பல பராக்ரமத்திலும் மிகுந்தவன் என்பது எனக் குத் தெரியும். ஆயினும் மாதே! உனது செளந்தர் யத்தில் கட்டுப்பட்டே உன் வார்த்தைக்கு நான் மதிப்புக் கொடுக்கிறேன் என்பது உண்மை. அழகின் உருவமே! உன் அழகுக்கு இந்த உலகமே ஈடாகர தெனில் நான் கட்டுப்பட்டது வியப்பாகுமா? தமிழ ருக்கு விரோதமாக நான் எதையும் செய்ய முற்படுவ தில்லை. ஆயினும் உன் முகத்தைக் காணும் போது என் சொந்த அபிப்பிராயம் அனைத்தும் பறந்துவிடுகிறது. அடி சித்ரபானு! நான் அன்று உன்னைக் காணவந்தபோது நீ மஞ்சளாடையால் உன் அழகிய தேகத்தை மறைத்திருந்தாய். இன்றோ