பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ணையற்ற வீரன் இடந்தரலாமா? நீங்கள் ஓர் ஆரியப் பெண்ணோடு சம்பந்தப்பட்டதில் உங்களுக்கு அவமானம் ஏற் படும் பட்சத்தில் என் உயிரை இதோ, உங்கள் எதிரில் மாய்த்துக்கொள்ளுகிறேன். நாதா! நான் பிறந்தது தங்கள் பொருட்டு. என் மலருடல் வாடாமல் வதங்காமல் என் பெற்றோர்களால் இந் நாள்மட்டும் காப்பாற்றப்பட்டதும் 53 உங்கள் பொருட்டே. இளமை ததும்பும் எனது அங் கங்கள் இந்நாள் வரை நன்னிலையில் இருப்பதும் உங்கள் பொருட்டே. நானோர் புதிய மலர். நீங்கள் அதிலுள்ள புதுத் தேனை உண்ணப் பிறந்த வண்டு. இத்தனையும் மறந்தீரே? சேனாதிபதி:- [முகத்தைக் கவனித்திருந்துவிட்டு.] கண்மணி! நான் ஒன்றும் யோசிக்கவில்லை. என்ன சொல்ல மறந்துவிட்டாய்? சித்ரபானு:- அதிருக்கட்டும். ஒரு மனிதன் உறுதி கூறுவதென்பது மறந்துவிடக்கூடியதா? சேனாதிபதி:- இல்லை; காப்பாற்றுவதற்காகவே. இதை ஏன் இப்போது கூறுகிறாய்? சித்ரபானு - நீங்கள் கூறியுள்ள உறுதி மொழியைத் திரும்பவும் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டிய தில்லையே? சேனாதிபதி- வேண்டியதில்லை. நான் கூறியுள்ள உறுதி மொழியை என் உயிர் போகுமளவும் மறவேன். நீ என்ன சொல்ல வந்தாய்? சித்ரபானு: - வேறொன்றுமில்லை. இளவரசரை என் சுற்றத்தார் சரிப்படுத்திவைத்திருக்கிறார்கள்.