________________
முகவுரைக் குறிப்புகள் 1."இங்ஙனக் தாஞ்செய்த வெறியாட்டு வேள்விகளை' அழித்தமைபற்றியே அவ்வாரியர் பெரிதுஞ் சினங் கொண்டு அவ்வேளாளரையும் அவருள் அரசரான வேனிசையுக் தாசியர், இராக்கதர், அசுரர் என்று இகழ்ந்து கூறி அவரைத் தாழ்த்துதற் பொருட்டுப் பொய்யான பல புராணக் கதைகளையும் எழுதி வைப்பாராயினர்." மறைமலையடிகள், “வேனசளர் நாகரீகம்" (பக்கம் 36) O 2. "ஆரியப் பார்ப்பனர்கள் அவசிய நிமித்தமே தமிழை உபயோகிக்கிறார்கள். அதாவது, ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வதுபோல. அவர்களுக்குச் சொந்த மொழி சமஸ்கிருதமேயாகும். 'தமிழைவிட சமஸ் கிருதமே மேல்' என்பதே அவர்களின் முடிந்தமுடிபு. ஆகையால் பார்ப்பனர்கள் தமிழால்ல" ஸர் ஏ.டி.பன்னீர்செல்வம், வேலூர் சொற்பொழிவு - (27.12.38) O 3. "ராமன் காலத்தில் தென் இந்தியா 'தஸ்யூக்கள் என்ற ராக்ஷஸர்களுக்கு'ச் சொந்தமாயிருந்தது இவர்கள் ஆரிய முனிவர்கள் செய்துவந்த யாகத்தை எதிர்த்தார்கள். இருந்தாலும் வட இந்தியாவிலி ருந்து வந்த ஆரியர்களைப் போலவே இந்த 'ராக்ஷ ஸர்கள்' என்பவர்களும் நாகரீகமடைந்திருந்தார்கள் பி. டி. சீனிவாசய்யங்கார், "இந்திய சரித்திரம். முதற்பாகம்”(பக்கம் 19)