61 இணையற்ற வீரன் ஒருவன் இருப்பானா இல்லையா? அவன் எப்படிப் பட்டவனாயிருப்பான்? அடேயப்பா! அவனால் ஆகாதது என்ன இருக்கிறது? அந்தப் பெரிய மனி தனைத்தான் 'கடவுள்' என்று அவர்கள் சொல்லுகி றார்கள்; தெய்வம் என்று சொல்லுகிறார்கள். அந்தக் கடவுள்தான் ஆரியரை அனுப்பித் தமிழ ருக்குப் புத்தி வரும்படி செய்யச் சொன்னாராம். அப்படியிருக்கையில் அந்தக் கடவுள் யார்பேச்சைக் கேட்பார்? ஆரியர் பேச்சைத்தான் கேட்பார். வேறொருவன்:- மெய்!மெய்! அதுவுமல்லாமல் எல்லாந் தெரிந்த இளவரசரே ஆரியர்களை வணங்கும் போது நாம் எந்த மூலை? மற்றொருவன்:- உம்! எவன் இந்தச் சக்ரவர்த்தியை நம்புவான் இனிமேல்? திடீரென்று ஜோதி உண்டா கிறது! ஆரியர் சொன்னபடி செய்துவிட்டு ஓடிவிடு கிறது! இன்னொருவன்:- நோய் நொடி வந்தால் ஆரியர்களிடம் போய் அவர்களை வணங்கினால் அந்த நோயை ஜோதியைக் கொண்டு தீர்த்துவிடுவார்களாம்! வேநொருவன்:- நேற்றுத் திம்மன் வீட்டுக் குப்பன் இறந்துவிட்டானாம். ஆரியப்பர்திரி மந்திரஞ் செய்து பிழைக்க வைத்துவிட்டாராம் இன்னொருவன்:- இப்படி யெல்லாம் இருக்கும்போது இந்தச் சக்ரவர்த்திக்கென்ன கொழுப்பு? [என்று பலவிதமாய்ப் பேசிக்கொண்டே ஜனங்கள் கலைகிறார்கள். பிறகு அக்கூட்டத்தில் மாறு வேடத்துடனிருந்த அரசனும் மந்திரியும் தனித்துப் பேசுகிறார்கள்.]
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/80
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை