62 இரணியன் (பாட்டு - 16) அரசன்:- மந்த்ரி ! சேனாதிபதியின் கட்டுக்கதையானது நமது நாட்டு மக்களிடம் யிருப்பதோடு அக்கட்டுக்கதையையும் சார்ந்த ஆரியர் புளூஞகளையும் சரிக்கவும் தொடங்கிவிட்டார்கள் ஜனங்கள்! காட்டுத்தீப்போல் பரவி அதைச் மெய்யென்று அ [இரக்கமாய்] இந்தாள்மட்டும் பகைவர்களாலும் அசைக்க முடியாத என்கெஞ்சத்தைக் கேவலம், ஆரியர் சூழ்ச்சியும், ஏமாற்றுக்களும் சலனப்படும்படி செய்து விட்டது. தமிழ்ப் பெருமக்கள் இக்காள்வரையில் என்னைச் சக்ரவர்த்தியாகப் பெற்றிருந்தால் அவள் கட்கு எவ்வகைப்பட்ட இன்னலும் ஏற்படாதவாறு காத்துவந்தேன். அவர்களின் மானத்தைக் காத்து வந்தேன். ஏமாற்றுக்காரரின் வலையிற் சிக்கிய இந் நானே அவர்கள் தங்கள் சுயமரியாதைக்கு இடை யூறு தேடிக்கொண்ட தீ நாளாகும். என் செய்வேன்! கலங்காத என் சித்தம் கலங்கவும் கேர்ந்தது. ஆயி னும் எனக்கு இன்று ஏற்பட்ட கலக்கம் என் பொருட்டன்று. எனது தமிழ்மக்கள் பொருட்டே. தன்மானம் என்ற பெரும் பதவியினின்று மானமற்ற அடிமை வாழ்க்கையின் பாதையில் அடி வைத்து விட்டார்களே! ஆரியர்களின் இந்தப் பொய்ப் பிர சாரத்தில் நமது சேனாதிபதியும் என் குமாரனும் ஈடுபட்டதின் காரண்ந்தான் புரியவில்லை! பேரைக் கேட்ட மாத்திரத்தில் எட்டுத்திக்கும் வாழ்த்துக் கூறும்படி சென்கோல் செலுத்தும் இரணியனுக்கு, வாய்த்த பிள்ளையின் தன்மையும் என்றாயிருக்கிறது! மக்திரி:- தங்கள் குமாரரைப்பற்றி எவ்வித முடிவுக்கும் நரம் வந்துவிடலாகாது. இன்னும் பார்க்கவேண்டும். [போகிறார்கள்.]
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/81
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை