அத்தியாயம் 12. - இடம்:- அரண்மனையின் ஒரு புறம். பாத்திரங்கள்:--ப்ரகலாதன், சித்ரபானு, சேனாதிபதி, சேவகர் [சித்ரபானு, ப்ரகலாதன், ஆசனங்களில் அமர்ந்தபடி] ப்ரகலாதன்:-- கண்மணி! சித்ரபானு! திடீரென்று இங்கு யாராவது வந்துவிடக் கூடும். ஆதலால் நீ உனது ஆடையைத் தரித்துக்கொள். இச் சமயத்தில் நமது ரகசியம் வெடித்துவிடக் கூடாது. நேற்று நீ ராஜ சபையில் ஆணுடை தரித்துக்கொண்டு வீற்றிருந்தா யல்லவா? அப்போது உன்உருவம் ஓர் அரசிளங்கும ரன் உருவமாகவே தோன்றிற்று. அப்போது நான் ஒரு பெண்ணாக இருந்தால் என் பாடு என்னாவது? சித்ரபானு:- நான் தங்களை முதலில் பார்த்தபோது தான் என்ன ஆனேனோ அதுதான் ஆகும். ப்ரகலாதன்:-அடி மயிலே! ஆசைக்குயிலே! நேற்று ராஜ சபையில் நான் ராஜவிஸ்வாஸப் பிரமாணம் செய்யாததால் என் தந்தை ஓங்கிய வாள் என் மீது பட்டிருந்தால் என் கதி என்ன ஆவது? உன்னை விட்டுவிட்டு இறந்துதானே போகவேண்டும்? (பாட்டு-18) சித்ரபானு:-- நாதா! உங்களுக்கு விஷயம் தெரியாது. இப்போது சொல்லுகிறேன் கேளுங்கள். களுக்குச் சக்ரவர்த்தியால் ஏதாவது ஆபத்து
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/87
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை