பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

vi 4. "ஓ! இந்திரனே! இடியை வைத்திருப்பவனே! எங்களுடைய பிரார்த்தனையைக் கேள்! 'தஸ்யூக் களின்' மீது இடியைப்போடு! 'ஆரிய'ருடைய பலத்தையும் கீர்த்தியையும் அதிகப்படுத்து.' 5. 'ரிக்வேதம்' அதிகாரம் 1(103:3) "நம்மைச்சுற்றி நாலா பக்கங்களிலும் தஸ்யூக் கூட் டத்தார் இருக்கிறார்களே! அவர்கள் யாகம் செய்வ தில்லை. அவர்கள் ஒன்றையுமே நம்புவதில்லை. அவர்களுடைய பழக்க வழக்கங்களே வேறாயிருக் கின்றன. அவர்கள் மனிதர்களே அல்ல ! ஓ! எதிரி களை அழிப்பவனே! அவர்களைக்கொல்லு! தாஸா' வம்சத்தை அழித்துவிடுவாயாக!' "ரிக்வேதம்' அதிகாரம் 10-(22:8) 6. "ஆதிகாலத்து பிராமணர்கள் ரத்தத்தைத் தொடுவ தில் அவமானப்படவில்லை. அவர்களுடைய கடவுள் களுக்கு மிருகங்களைக் கொன்று யாகஞ் செய்தார் கள்,” டி.ஸி. ஆலன், "இந்திய சரித்திரம்" (பக்கம்-8) 7. "காடுகளிலிருந்த மக்கள் யாரென்பது ராமருக்கும் அவரைச் சேர்ந்த ஆரியர்களுக்கும் தெரியாது. அழ கில்லாதவர்களைக் 'குரங்குக'ளென்று அழைத்தார். கள். அவர்களிலேயே மிகுந்த பலமும் தைரியமும் செல்வாக்குமுடையவர்களை 'அரக்கர்க'ளென்று அழைத்தார்கள். தென் இந்தியாவில் வசித்த மக்களே இப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்' சுவாமி விவேகானந்தர், "சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்;- ராமாயணம்' (பக்கம்- 587,589)