இணையற்ற வீரன் ப்ரகலாதன்:- ஏன் அப்படிச் செய்தீர்? சேனாதிபதி:- இதென்ன இப்படிக் கேட்கிறீர்? எல்லாம் உம்பொருட்டுத்தானே! உம் நலத்துக்காகவே ஆரி யப் பாதிரிகள் சொல்லியபடி செய்தேன். சக்ர வர்த்தி தயை எனக்கு எதற்கு? உம் தயையல்லவா சரஸ்வதம்! 71 ப்ரகலாதன் :--- சேனாதிபதி! நான் உமக்கு நன்றி கூறு கிறேன். ஆனால் அன்று நடந்ததில் தெய்வாம்சம் ஒன்றுமேயில்லை. சேனாதிபதி:- [நகைத்து) இளவரசே! நன்றாகக் கூறு வேண்டுமென்றால், அன்று உமக்காக நான் நடத் தியது புரட்டே. புரட்டின் பேர் தெய்வாம்சம் என்றால் பொருத்தமாகத்தா னிருக்கும். (சேவகன் ஒருவன் அங்குவந்து முதலில் சேனாதி பதியையும் பின்பு இளவரசையும் வணங்கி நிற்றல்] சேனாதிபதி:- என்ன காரியமாய் வந்தாய்? சேவகன்:- சக்ரவர்த்தியார் இளவரசரை அதிசீக்கிரம் அழைத்துவரக் கட்டளை பிறப்பித்துள்ளார். ப்ரகலாதன்:- நேற்றையவரையில் ஒன்றும் மாற்றம் இல்லை. ராஜ விஸ்வாஸப் பிரமாணம் செய்யும்படி என்னைக் கட்டாயப்படுத்துவதில் பயனில்லை என்று சொல். சேனாதிபதி:- சேவகா, இங்குவா ! நான் இங்கிருப்பதாக எவரிடத்திலும் சொல்லாதே! ஜாக்கிரதை!
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/90
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை