பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 இரணியன் சேவகன்:- அப்படியே! [வணங்கிப்போதல்] " ப்ரகலாதன்:- [சேனாதிபதியை நோக்கி] நீங்கள் இன்னும் சற்று நேரம் இங்குத் தங்க உத்தேசம் போலும்! சேனாதிபதி:- ஆம்; தாமதிக்கவேண்டி யிருக்கிறது. நான் இங்கிருப்பதால் தங்களுக்கு இடையூறு ஒன்று மில்லையே ? று ப்ரகலாதன்:- இல்லை, இல்லை, இல்லை. இந்நேரம் என் தந்தைக்குச் சேவகன் சேதி சொல்லியிருப் பான். அடிபட்ட பாம்புபோல் - சீறுவார். சேனாதிபதி:- என்ன நடக்கிடறதென்று பார்ப்போம்: [நான்கு சேவகர்கள் இரும்புச் சங்கிலிகளுடன் பிரகலாதனிடம் வருகிறார்கள். சேனாதிபதிக்கு முதலில் மரியாதை செய்து நிற்கிறார்கள்.] சேனாதிபதி:- என்ன விசேஷம்? நால்வர்:- தலைவரே! இளவரசரை இச்சங்கிலியால் கட்டி இழுத்துவரச்சொன்னார் சக்ரவர்த்தி. ப்ரகலாதன்:- பார்த்தீர்களா! நான் சொல்லியதுபோல் நடந்தது! சேனரதிபதி:- அப்படியா? போர்ச் சேவகர்களே ! இப்படி வாருங்கள். ஒரு விஷயம். நான் உங்கள் தலைவன். நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யக் கட்டுப்பட்டிருக்கிறீர்களல்லவா?